காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாத நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது சிறுமழையோ, இதமழையோ பெய்து வருகிறது. இன்று நள்ளிரவு உட்பட - கடந்த இரண்டு நாட்களில் இதுவரை 3 முறை சிறுமழையும், இதமழையும் பெய்துள்ளது. இதனால், ‘வழமை போல’ நகரின் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் நகரில் மிதமான வெப்பத்துடன், இதமான வானிலை நிலவுகிறது. கனமழையை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இச்சிறுமழையும், இதமழையும் சிறிது ஆறுதல் அளித்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று (28.01.2017. சனிக்கிழமை) வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 4.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
|