திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துடன் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணியான சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பில் வாகனங்களின் முகப்பு விளக்கின் மீது ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, 23.01.2017. திங்கட்கிழமையன்று 16.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
தமுமுக மாவட்டப் பொருளாளர் காதிர் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் ஃபாத்திமா பர்வீன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் முறை, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசியதுடன், வாகனங்களின் முகப்பு விளக்கின் மீது கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சுந்தரநேசன் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார்.
இந்நிகழ்ச்சியில், தமுமுக - மமக மாவட்ட, நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
|