பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ள காயல்பட்டினம் வழி மாநில நெடுஞ்சாலையை புனரமைக்க கோரி - தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலை துறையின் அரசு செயலர் ஆகியோரிடம் இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (எண் 176) - பல இடங்களில், குறிப்பாக தாயிம்பள்ளி சந்திப்பு, அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி சந்திப்பு ஆகிய இடங்களில், மிகவும் பழுதடைந்துள்ளது.
இச்சாலையை புனரமைக்க கோரி - 27-6-2016, 18-7-2016, 19-9-2016, 7-11-2016, 29-12-2016, 11-1-2017 - ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோரிடம் - மனுக்கள், நடப்பது என்ன குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த ஏழு மாதங்களாக நிர்வாக ஒப்புதல் கிடைக்கப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற பதிலே வழங்கப்பட்டு வருவதால், இது சம்பந்தமான மனு இன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அரசு செயலர் (மற்றும் கூடுதல் தலைமை செயலர்) திரு ராஜீவ் ரஞ்சன் IAS யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|