அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வி.கே.சசிகலா விரைவில் முதல்வர் ஆகிறார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.
இந்த ஆலோசனையை அடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
இதில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. சின்னம்மா CM ஆகிறார்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[05 February 2017] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45197
தமிழக முதலமைச்சராகிறார் சசிகலா அவர்கள்!
இதற்கு ஒட்டுமொத்த MLA -களும் ஆதரவு!.
எவ்வளவு காலம் தப்பிய துல்லியமான கணிப்பு.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் .இதுவரை செய்யாத சாதனையை ,அனைத்து MLA-க்களும் செய்து காட்டி இருக்கிறார்கள்!.
மறைந்த முதல்வர் அவர்கள் பலமுறை தற்காலிக முதல்வராக திரு.O.பன்னீர்செல்வத்தை நியமனம் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவு,என்பதை இப்பொழுது அனைத்து MLA -க்களும் ஒருமனதாக வெளிப்படுத்தி காட்டி இருக்கிறார்கள்!
திருபன்னீரைவிடபலமடங்கு,அறிவிலும்,ஆற்றலிலும்,அடக்கத்திலும்,திறமையிலும்,நேர்த்தியிலும் நிதானத்திலும் அரசை ஆளுகின்ற ஒரே திறமை திருமதி சசிகலா அவர்களுக்கு இருக்கிறது என்பதை எந்த ஒரு MLA வும் அம்மாவின் காலத்தில் சொல்ல துணியவில்லை என்பதை துல்லியமாக எடுத்து காட்டிஇருப்பது தான் இன்றைய தேர்வு!
ஒவ்வொரு MLA -வின் மனதிலும் இவ்வளவுநாள் மண்டிக்கிடந்த ஒரு ஆதங்கம்,நம் சின்னமாவாகிய சசிகலா அவர்களை ஒரு MLA-வாகவோ, ஏன் ஒரு சிறு கட்சி பொறுப்பில் கூடபெரியம்மா வைக்கவில்லயே என்ற வெறியினால் வெகுண்டழுந்தவர்களின் வெற்றிப்பெருக்கின் முடிவுதான் இன்றைய முடிவு.. இம்முடிவானது இயற்கை எய்திய பெரியமாவிற்கு சமர்ப்பணமாகும்!
திரு பன்னீர் அவர்களே,ஏதோ அம்மாபோட்ட ஆறுதல் பதவியை பெற்று செயற்பணியில் சுழன்றுவந்த நீங்கள், இனிமேல் பேசாமல் மறைந்த அம்மாவின் புகழை பாடியபடியே உங்கள் பொழுதை கழிக்கவும்!
அம்மாவின் சரியான அணுகுமுறை தேர்வு இல்லாமல் அல்லோலமான தமிழகம்,இன்று அந்த அம்மாவிற்கே பாடம் புகட்டுவதுபோல் அனைத்து MLA க்களும் தேர்தெடுத்த அறியபெரிய தலைமையான சின்னம்மாவின் தலைமையில் இத்தமிழகம் தளிர்ந்தோங்கப்போகிறது,இங்கு தேனாறும், பாலாறும் பாய்ந்து வழியப்போகிறது.அதை அனுபவிக்க அனைத்து தமிழக மக்களும் தயாராக இருந்து கொள்ளுங்கள்!
இனி எந்த MLA வாவது,எங்கள் இதய தெய்வம் அம்மாவின் அடிச்சுவட்டை அணுவளவும் மாறாமல் ஆட்சி செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது என்று சொல்ல வந்தால்,அவர்களை (மக்களாகிய) நீங்கள் பிடித்து என்ன கேட்பீர்களோ அதை உங்கள் நடுநிலை நற்சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
3. Re:...எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் posted bymackie noohuthambi (colombo)[05 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45198
இந்த உலக வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஞானிகள் சொன்னார்கள் என்பதை விட இப்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். ஜெயலலிதா பொது செயலாளராக இருந்தபோதும் முதல்வராக இருந்த போதும் அதிமுக உறுப்பினர்களும் சரி ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களும் சரி பெரிய பெரிய பதாதைகளை வைக்கும்போது கட் அவுட் வைக்கும்போதும் அங்கே பெரியதாக ஒரு அடை மொழி இருக்கும் .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் -
தமிழகத்தின் நிரந்தர முதல்வர்.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் -
வாழ்த்தி வணங்குகிறோம்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா..
என்பது முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டு குலைக்க கும்பிடு போட்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தவர்களின் வேஷம் கலைந்து விட்டது. இருந்தாலும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும் .
ஆனாலும் சொத்து குவிப்பு வழக்கு வெளிநாட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத பணங்கள் வந்த வழக்கு இவை எல்லாம் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் சசிகலா அவர்கள் தன்னை யாரும் நிரந்தர பொது செயலாளர் நிரந்தர முதல்வர் என்று அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நிலையும் மாறும் .
சின்னம்மா சின்னம்மா
நீங்கள் வரவேண்டும் தமிழகத்தின் CM மா என்று கோஷமிட்டவர்களின் கனவு பலித்து விட்டது.
4. Re:... posted byVILACK SMA (Jeddah)[05 February 2017] IP: 5.*.*.* | Comment Reference Number: 45199
கழுத்துக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் , முதல்வராக பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வருகிறார் என்றால் இவருடைய மனோதைரியத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross