காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில், 26.01.2017. வியாழக்கிழமையன்று - நிழல் தரும் மரங்கள் நடும் விழா நடைபெற்றது.
அதன் தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.அறிவுச் செல்வன் துவக்கமாக மரங்களை நட்டு நீரூற்றினார். அவரைத் தொடர்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், ரெட் ஸ்டார் சங்கத்தின் மூத்த அங்கத்தினரான எம்.ஏ.காதிர் அலீ, ஆஸாத் உள்ளிட்டோர் மரங்களை நட்டு நீரூற்றினர்.
புங்கை, இயல்வாகை உள்ளிட்ட - நிழல் தரும் 20 மரங்கள் மைதானத்தைச் சுற்றி நட்டப்பட்டன. ஏற்பாடுகளை, ரெட் ஸ்டார் சங்க உறுப்பினர்களான எஸ்.அப்துல் வாஹித், காஸிம், எம்.ஏ.ஜியா, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.இல்யாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
|