இந்தியாவின் 68ஆவது குடியரசு நாள் 26.01.2017. வியாழக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா அன்று 08.45 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமை தாங்க, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகரப் பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எம்.யாஸீன், பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, வாவு எம்.எம்.உவைஸ், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.ஒய்.ஜாஃபர் ஸாதிக், ஐ.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஒய்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் இறைவாழ்த்து, தமிழத்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து, தலைமையாசிரியர் எம்.கே.ஷெரீஃப் வரவேற்புரையாற்றினார்.
பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப் தேசிய கொடியேற்ற, மாணவர்கள் கொடி வாழ்த்துப் பாடலைப் பாடினர். பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் (பொறுப்பு) அறிவுச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
கடந்த கல்வியாண்டில் - பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சிக்குக் காரணமாக இருந்த ஆசிரியர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விழாவின்போது அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னிலை வகித்தோர் அவற்றை வழங்கினர்.
நன்றியுரை, நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது. இதில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
‘ஆசிரியர்’ பீர் முஹம்மத் ஹுஸைன் |