காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெரு அபிப் க்ளினிக், புன்னகை மன்றம் ஆகியன இணைந்து, 23.01.2017. திங்கட்கிழமையன்று 09.00 மணிக்கு, க்ளினிக் வளாகத்தில் நுரையீரல் & குழந்தைகள் நல மருத்துவ இலவச முகாமை நடத்தின.
அரவிந்த் தசரதன், முஹ்யித்தீன் ஹாஜி ஆகிய இரண்டு மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்த இம்முகாமில், தேவைப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்பைரோ மீட்டர் கருவியைக் கொண்டு நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டதுடன், நெபுலைசர் கருவியைக் கொண்டு சுவாசக் கோளாறு சரி செய்யப்பட்டது.
கை முறிவுடன் வந்த ஒரு சிறுமிக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தேவைப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
16.00 மணிக்கு நிறைவுற்ற இம்முகாமில் மொத்தம் 120 பயனாளிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஏ.எல்.முஹம்மத் நிஜார் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.L.முஹம்மத் நிஜார்
|