சென்னை காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், வரும் பிப்ரவரி மாதம் 04, 05 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் இன்பச் சிற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சிற்றுலா ஏற்பாட்டுக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
கே.சி.ஜி.சி.யின் இரண்டு நாள் இன்பச்சிற்றுலா
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் ஈடிணையில்லா கிருபையும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
நமது கே.சி.ஜி.சி. யிலிருந்து ஆண்டுக்கு ஓரிருமுறை மேற்கொள்ளப்பட்டு வரும் இன்பச் சிற்றுலாக்கள் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்துவந்த நிலையில் முதன் முதலாக இரண்டு நாள் இன்பச் சுற்றுலா- சென்னையின் ஓய்வில்லா ஓட்டத்திற்கு நடுவில் ஒரு சிறிய குடும்பசகித உறவாடலுக்காக - வரும் 04 & 05 ந்தேதி, பிப்ரவரி 2017 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) சென்றுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இம்முறை சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சென்னை – பாண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள மரக்காணம் என்ற இடத்தில் அமைந்துள்ள கட்டணம் செலுத்தப்பட வேண்டிய ரிசார்ட்ஸுக்கு (RESORTS) சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு சென்னை மண்ணடி மற்றும் எக்மோரிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளிரவு அங்கேயே தங்கிவிட்டு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அவ்விடத்திலிருந்து சென்னை திரும்பவுள்ளோம்.
சென்னையில் வாழும் காயலர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு - உறவுகளை வலுப்படுத்தவும் அதன் பயனாக நமதூர்வாசிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி சமூக நலப்பணிகளில் ஒன்றிணைந்து உதவிடவுமே - இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள்:-
• குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான போட்டிகள் (ஆண், பெண் பகுதிகளில்) தனித்தனியே நடத்துதல்
• கே.சி.ஜி.சி.யின் கடந்த கால செயல்பாடுகள் பற்றிய குறிப்புகளை வழங்கல்.
• வந்திருப்பவர்களிடம் ஆலோசனைகள் பெருதல்.
• இதமான குளியல்.
• அறுசுவை உணவுகள்.
• போட்டியில் வென்றவர்களுக்கான பரிசுகள் வழங்குதல்.
கட்டண விபரம்:-
இதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு 650 ரூபாய் எனவும் 3 வயதுக்கு மேல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணத்திற்கான வாகனங்கள் சென்னை மண்ணடி மற்றும் எழும்பூரிலிருந்து புறப்படும்.
தனியாக வாகனத்தில் வருவோர் முன்னதாகவே எங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகிறோம்.
சொந்த வாகங்களில் வருவோருக்கு எவ்வித கட்டணச் சலுகையும் கிடையாது.
இப்பயணத்திற்கு முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
பயணம் இன்ஷாஅல்லாஹ் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்படும்.
மொத்தம் 100 இருக்கைகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.
31-01-17 செவ்வாய்க் கிழமை இரவுக்குள் வரும் முன் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
எம்.எம். அஹ்மத் 93810 07255
முஹம்மத் நூஹ் சொளுக்கு -93828 08007
முஹம்மத் தம்பி குளம் – 98401 84838
ஜாவித் நஸீம் – 98840 51013
எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் - 97911 17765
பி.ஏ. நெட்காம் புகாரி – 90946 54940
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் அனைவரையும் மேன்பைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
KCGC சார்பாக - சென்னையிலிருந்து...
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
|