காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை, திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, துளிர் பள்ளி வளாகத்தில், பொது & கண் மருத்துவ பரிசோதனை இலவச முகாமை 29.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தின. இதில், திரளானோர் பங்கேற்றுப் பயன் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
துளிரின் நடந்தேறிய பல்துறை மருத்துவ முகாம்:
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியினை நடத்தி வரும் துளிர் அறக்கட்டளை ஏற்பாட்டில் 2வது பல்துறை சிறப்பு மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் 29.01.2017 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடை பெற்றது. இம் முகாமினை திருநெல்வேலி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, அரவிந்த்; கண் மருத்துவமனை துளிருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இம் முகாமில் குழந்தை மருத்துவம், எலும்பு முட்டு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம் மகப்பேறு மகளிர் நோய் மருத்துவம், சிறு நீரக மருத்தும், மூளை நரம்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் புற்று நோய் மருத்துவம், பல் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு துறைகளில் இருந்தும் 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர். இந்த முகாமிற்கான முன்னேற்பாடுகளை நமதூர் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி திருநெல்வேலி குழந்தைகள் மருத்துவர் டாக்டர் நம்பியப்பன் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர். அன்னை வேளாங்கண்ணி, சென்னை கிலேடு டிரக்ஸ் & ஃபார்மா மருந்து கம்பெனி ஆகியவற்றின் சார்பில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இலவசமாக வழங்கப்பட்டதோடு 40 வயதினை தாண்டிய அனைவருக்கும் எலும்பு அடர்த்தி கண்டறியும் பரிசோதனையும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. இந்த பல் துறை மருத்துவ முகாமில் உள்ளுர், புறநகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் 838 பேர் பங்கு பெற்று பயன் அடைந்தனர்.
இதே நாளில் துளிரின் மற்றோரு கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். இம் முகாமில் 388 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கலந்து கொண்டு மருத்துவர்களின் பரிந்துரை பெற்ற 40க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு துளிர் அறக்கட்டளை மூலம் மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கிட ஆவண செய்யப்பட்டுள்ளது.
இம் முகாமை தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறை துனை இயக்குநர் திருமிகு மதுசுதனன் பார்வையிட்டு துளிர் நிர்வாகிகளையும், பணியாளர்களையும் பாராட்டினார். இம்முகாமிர்கான ஏற்பாடுகளை துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது, செயலா; சேக்னா லெப்பை அறங்காவலர்கள் ஆயிஷா சாஹிப் தம்பி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் மறறும் துளிர் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இந்த முகாம் நடைபெற வெளியூர் - உள்ளுர் தனவந்தர்கள் பலரும் முன் வந்து உதவினர். பரிமார் தெரு சமூக நிறுவனத்தின் உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டு உறுப்பினர்களாக பணியாற்றினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|