காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பிற்கு, புதிய நிர்வாகிகள் அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்குழுக் கூட்டம், 30.01.2017. திங்கட்கிழமையன்று, அமைப்பின் அலுவலகத்தில், தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையில் நடைபெற்றது.
கிராஅத், வரவேற்புரையைத் தொடர்ந்து, அண்மையில் காலமான - அமைப்பின் ஆலோசகர் மர்ஹூம் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயற்குழு உறுப்பினர் பாளையம் இஸ்மாஈல் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பிழை பொறுப்பிற்காக) பிரார்த்திக்கப்பட்டது.
அமைப்பின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
நடப்பு நிர்வாகிகளின் பொறுப்புக் காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து, 2017-2018 பருவத்திற்கான புதிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்
துணைத் தலைவர்:
கே.எம்.உமர் ஃபாரூக்
செயலாளர்:
கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
இணைச் செயலாளர்கள்:
கே.எம்.என்.உமர் அப்துல் காதிர்
கே.எம்.டீ.அபூபக்கர் ஸித்தீக்
பொருளாளர்:
இசட். முத்து இப்றாஹீம்
செயற்குழு உறுப்பினர்கள்:
கே.எம்.டீ.சுலைமான் லெப்பை
எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன்
எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
வி.எம்.எல்.மொகுதூம் அப்துல் காதிர்
கே.எச்.முஹம்மத் உமர் ராஃபிஉ
நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. அமைப்பின் செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.N.மஹ்மூத் லெப்பை
படங்கள்:
பிரபு ஸுல்தான் ஜமாலுத்தீன்
|