காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 26ஆவது பரிசளிப்பு விழா 30.01.2017. திங்கட்கிழமையன்று, பள்ளி வளாகத்தில் - காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் நடைபெற்றது.
எல்.கே.ஜி. முதல் 03ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு காலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கினார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நூலகத் துறை தலைவர் முனைவர் ஒய்.மும்தாஜ் பேகம், கணிதத் துறை தலைவர் வி.சுப்ரபா, ஆங்கிலத் துறை தலைவர் ஜெ.கவுசல்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர்.
முன்னதாக, பள்ளியின் ஆசிரியையரான ஜெ.ஆரோக்கிய ஜெமிலா அனைவரையும் வரவேற்க, ரா.செல்வநங்கை சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
ஆசிரியையரான மரிய ஜெனிட்டா நன்றி கூறினார். எஸ்.எஸ்.ஃபாத்திமா நவாஜியா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
04 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழா அன்று மாலையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியை பீ.கன்னிகா வரவேற்புரையாற்றினார். பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி நிகழ்ச்சி & சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையாற்றினார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் க்றிஸ்டி மெர்ஸி தலைமை தாங்கினார். அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஜெ.ஷர்மிளா மேரி ஜானகி, கணினி அறிவியல் துறை தலைவர் ஏ.நேசா அஃனஸ் பெலிண்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார். எஸ்.கீர்த்திகா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.
|