காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் மாணவ-மாணவியர் பலர், அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் மாணவ - மாணவிகள், இவ்வாண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம். எமது பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஹாஜி. S. அக்பர் ஷா, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 'தொடர் முன்னேற்றம்' என்னும் உயரிய நோக்கத்தை கொண்டு எமது பள்ளி செயல்படுகின்றது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2016) எமது மாணவ கண்மணிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்கள் பெற்ற இடங்கள் மற்றும் பரிசுகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம், தருமபுரி சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டி:
2. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற சிவந்தி வினாடி - வினா போட்டி:
3. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சார்பில் ஓவியப் போட்டி நமது பள்ளியின் அரங்கில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவ - மாணவிகளின் பின் வருமாறு:
4. ரத்னா சாகர் புத்தக பதிப்பகம் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற இளம் சிட்டுக்கள்:
5. மாணவ மன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவிகள்:
6. எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தின் சார்பாக நடைபெற்ற எஸ்.ஆர்.முத்து நாடார் நினைவு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற எமது மாணவ - மாணவிகளின் தொகுப்பு:
7. தூத்துக்குடி காமராஜர் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற இந்தியா அரசியலமைப்பு தின போட்டியில், எமது பள்ளியின் மாணவி கே. பரீதா (11ம் வகுப்பு) அவர்கள் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று நமது பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
சிறப்பிடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் நிறுவனர்/தாளாளர் ஹாஜி.எஸ்.அக்பர் ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியர்கள், போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவிகளை மனதார பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் |