காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் அபூர்வ துஆ பிரார்த்தனை 18.04.2018. புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில், உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
அன்று மாலையில் கடற்கரையில் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது. அதன் காரணமாக, இன்று காலையில் கடற்கரையில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டன.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் உத்தரவின் படி, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் கடற்கரையில் சிறப்பு துப்புரவுப் பணிகளைச் செய்தனர். இதனால், தற்போது கடற்கரை சுத்தமாகக் காணப்படுகிறது.
|