கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி என்பதை விளக்கி வெளியிடப்பட்டுள்ள காணொளிக் காட்சியை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மக்கள் நலன் கருதி பகிர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின்தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ், இலவச கல்வியை, தகுதியான மாணவர்கள் எவ்வாறு பெறுவது என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி, பொது மக்களின் நலன் கருதி - மறு வெளியீடு செய்யப்படுகிறது. கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்கி, அதைக் காணலாம்!
https://youtu.be/3WBa6p9Xpsc
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 19, 2018; 10:00 pm]
[#NEPR/2018041903]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|