காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI அமைப்பின் சார்பில் கையெழுத்துப் பரப்புரை நடத்தப்படுகிறது. இதுகுறித்த அக்கட்சியின் செய்தியறிக்கை:-
20/04/2018 வெள்ளிக்கிழமை அன்று காயல்பட்டினத்தில் மாபெரும் விழிப்புணர்வு கைய்யெழுத்து பிரச்சாரம்.
==============================
BAN DCW தொடர் போராட்டத்தின் ஓரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் DCW ஆலைக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரம் நடத்துவது என்று SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
WE STAND FOR BAN DCW என்ற முழக்கத்தோடு இந்த தொடர் போராட்டங்களை DCW ஆலையை இழுத்து மூடும்வரை மக்கள் மன்றத்தில் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தீர்மானத்தின் அடிப்படையில்..
20/04/2018 வெள்ளிக்கிழமை,
நேரம் : ஜும்ஆ தொழுகைக்கு பிறகு,
இடம்: அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் (காயல்பட்டணம்).
DCW ஆலைக்கு எதிரான தொடர் போராட்டங்களுக்கு தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைசார்ந்த நடவடிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த தொடர் போராட்டங்களில் உங்கள் அனைவரையும் பங்கேற்றக அழைக்கிறோம்..
ஒருங்கிணைப்பு :
SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA (SDPI கட்சி ) தூத்துக்குடி மாவட்டம்.
தொடர்புக்கு : 9442642661 / 9894861588
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross