கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிக்கூடங்களிலும் சேர்க்கை பெற முடியும் என்ற அரசு அறிவிப்புத் தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.
கடந்த ஆண்டு, மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD) மற்றும் CBSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில், மொத்தம் 95,000 மாணவர் சேர்க்கை, RTE சட்டத்தின்கீழ், தமிழகத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு - மாநில பாடத்திட்டங்கள்படி (STATE BOARD) நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் மூலம் மட்டும், தமிழகத்தில் 62,351 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் - அரசு உதவி பெறும் / பெறாத சிறுபான்மை அந்தஸ்து (AIDED/UNAIDED MINORITY STATUS) பெற்றுள்ள பள்ளிக்கூடங்கள் மட்டும் விதிவிலக்கு பெற்றுள்ளன.
CBSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் RTE சட்டப்படி பயில, இணையவழியில் தற்போது ஏற்பாடுகள் இல்லை. இதற்கான படிவங்களை - அப்பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்கள்/பெற்றோர்கள் பெறலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 21, 2018; 3:00 pm]
[#NEPR/2018042102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|