அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறையில் தனியார் பள்ளிக்கூடங்கள் வகுப்புகளை நடத்துவதற்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கல்வியாண்டு இறுதி தேர்வுகள் நிறைவுற்று - கோடை விடுமுறை நாட்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன. கோடை விடுமுறை தினங்களில் - அரசு பள்ளிக்கூடங்களோ, தனியார் பள்ளிக்கூடங்களோ - வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நடப்பது என்ன? குழுமம் சார்பாகவும் இந்த கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகள், நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சமீபத்தில் அனுப்பப்பட்டிருந்தது.
மாநிலத்தின் பல இடங்களில் 100 டிகிரி FAHRENHEIT வெப்பத்தை ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே காண முடிந்தது. இந்த நிலையில், நகரின் சில தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு அறிவிப்பை மீறி - கோடை விடுமுறைதினங்களிலும் வகுப்புகள் நடத்தி வருகின்றன.
மாணவர்களின் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கக்கூடிய இந்த செயலை பெருவாரியான மாணவர்களும், பெற்றோர்களும் விரும்பாவிட்டாலும், பள்ளிக்கூடங்களின் நிர்பந்தத்தினால், செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
நாளை (ஏப்ரல் 23) - பன்னிரண்டாம் வகுப்புக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கும் என ஒரு தனியார் பள்ளிக்கூடம், பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதுள்ளது. பார்க்கவும் கீழே:
Dear parent, From Monday (23.04.18) classes will be held for std XII from 9:30 a.m. to 3:30 p.m. chemistry and mathematics class will be held. Van will come by 8:30 a.m. this information is for kayalpatnam students alone. For long distance students van will come by 8:00 a.m. Parents are requested to co-operate.
கல்வியாண்டில் முறையாக வகுப்புகளை பள்ளிக்கூடங்கள் நடத்தினாலே போதுமானது; பதினொன்றாம் வகுப்பிலேயே அரசு பொது தேர்வு எழுதி, விடுமுறையையும், ஓய்வையும் எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் உடல் நலன் / மன நலனை கருத்தில் கொள்ளாது, இவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்துவது - கண்டிக்கத்தக்க செயலாகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 22, 2018; 7:30 pm]
[#NEPR/2018042203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|