ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் – வரும் மே மாதம் 31ஆம் நாளன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்படவுள்ளதாக அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்த நிகழ்வறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 56 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 13.04-2018 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது அவர்களின் தலைமையில் பொருளாளர் P.M.ஹுஸைன் நூருத்தீன் அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
ஷீபா மருத்துவ உதவி :
மன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் DR. ஹமீத்யாசிர் அவர்களின் பரிந்துரைப்படி 12 நபர்களுக்கு ஷீபா மருத்துவ உதவியாக RS 45,௦௦௦ நிதி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
மன்றத்தின் 12-ஆவது பொதுக்குழு
மன்றத்தின் அடுத்த (12ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் இஃப்தார் நிகழ்ச்சியுடன் எதிர்வரும் மே 31- ஆம் திகதி வியாழக்கிழமையன்று வெகுசிறப்புடன் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் பொதுக்குழு இதர காரியங்கள் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாகவெளியிட முடிவுசெய்யப்பட்டது.ரமழானில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் கீழ்கண்டபடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இஃப்தார் மற்றும் பொதுக்குழு கமிட்டி
நிகழ்விடம் காரியங்களை செயல்படுத்தும் பொறுப்பில் M.M மக்பூல் அஹ்மது, S.A.C. ஹமீத், P.M.ஹுஸைன் நூருத்தீன், ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரி, DR.ஹமீத்யாசிர் ஆகியோர்களும்.
பொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp) மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பொறுப்பில் PMSR இப்ராஹிம், PMSR ஷேக்னா, M.H.L.ஷேக் மற்றும் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் ஆகியோர்களும்,
இணைய தளங்களின் மூலம் தகவல் தெரிவிக்க மன்ற செய்தி பொறுப்பாளர், A.R ரிஃபாய் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
சந்தா தொகை வசூலிக்கும் பொறுப்பில் நோனா அபூஹுரைரா, எம்.ஓ.அன்ஸாரீ A.R. ரிஃபாய், அப்துல் ஜப்பார் மற்றும் இஸ்மாயில் ஆகியோர்களும்.
காயல் பாரம்பரிய கஞ்சி,தேநீர்,மற்றும் நோன்பு திறப்பு உணவு காரியங்களை செயல்படுத்த M.M மக்பூல் அஹ்மது,S.A.C.ஹமீத், எம்.ஓ.அன்ஸாரீ, PMSR ஷேக்னா மற்றும் இஸ்மாயில் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.
இமாம்-பிலால் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுகளைப்போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக நிதியை வழங்குவதற்கு மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது, இணைப்பொருளாளர்: நோனாஅபூஹுரைரா ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி!
கடந்த செயற்குழுவில் முடிவு செய்தபடி வரும் ரமழான் மாத உணவுப்பொருள் வழங்க நாடுவோர் அதன் பொறுப்பாளர்களான மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது, செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்) , துணைச்செயலாளர் ஷம்சுதீன் ஆகியோர்களிடம் உடனடியாக வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை திட்டம்.
கத்தார் காயல் நலமன்றத்தின் ஒருங்கிணைப்பில் ஏழை எளிய மாணவ /மாணவிகளின் சீருடை திட்டத்தில் கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் அனுசரணை வழங்கிட உறுப்பினர்களை மன்றத் தலைவர் வேண்டிக்கொண்டதோடு,அதற்கான தொகையை தன்னிடம் அல்லது இணைப்பொருளாளர்: நோனாஅபூஹுரைரா அவர்களிடம் கொடுத்திட கேட்டுக்கொண்டார்கள்.
இரங்கல் தீர்மானம்
அண்மையில் காலமான ஜித்தா காயல் நல மன்ற அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள் மற்றும் நமது அபூதபீ காயல் நல மன்ற மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்களின் மாமனாருமான கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.யி.நெய்னா மரைக்கார் ஆகியோர்களுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இறுதியாக ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
A.R.ரிஃபாய்
(பொறுப்பாளர் – மக்கள் தொடர்பு & செய்தி ஊடகத்துறை)
படங்கள்:
சாளை தாவூத்
(செயற்குழு உறுப்பினர்)
|