கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இன்று துவங்கியுள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விளக்கத்தை உள்ளடக்கியும், “நடப்பது என்ன?” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின்தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார் பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14 வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இன்று (ஏப்ரல் 20), இந்த திட்டத்தின் கீழான விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நிரப்ப முகவரி:
http://www.dge.tn.gov.in
பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தையும் நிரப்பி, *விருப்பமுள்ள 5 பள்ளிக்கூடங்கள் வரை சமர்ப்பிக்கலாம்...
பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பம் – மாதிரி:-
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு – வழிகாட்டுதல்கள்
இறுதி நாள் – மே 18
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12(1)(சி)ன் கீழ் 2018-2019 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. விண்ணப்பிப்பதற்கான வசதி http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.
2. இணையதளத்தில் தனியாக USER ID மற்றும் PASSWORD தேவையில்லை
3. மே 18ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
4. 25% ஒதுக்கீட்டில் சேர்க்கை கோருபவர்கள் கண்டிப்பாக இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் இடங்கள்
• முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்
• மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்
• மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்
• மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம்
• உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்
• அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம்
• அரசு இ-சேவை மையங்கள்
=====பதிவேற்றம் செய்யத் தேவையான சான்றிதழ்கள்=====
பின்வரும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பொழுது கொணர வேண்டும்.
1. குழந்தையின் ஒளிப்படம் (Photo)
2. பிறப்புச் சான்று (பின்வருனவற்றுள் ஏதாவது ஒன்று)
• பிறப்புச் சான்று (Birth Certificate)
• மருத்துவமனை உதவியாளர் மற்றும் மருத்துவச்சிப் பதிவேடு நகல் (Hospital Auxiliary and Midwife register)
• அங்கன்வாடி பதிவேடு நகல் (Anganwadi record)
• பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பிறந்த தேதி குறித்து வழங்கிய உறுதி மொழி (Declaration through an affidavit of the age of the child by the Parent / Guardian)
3. இருப்பிடச் சான்று (ஏதேனும் ஒன்று)
• குடும்ப அட்டை (Family Card)
• வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
• ஆதார் அட்டை (Aadhar Card)
• ஓட்டுநர் உரிமம் (Driving Licence)
• வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook)
• தொலைபேசிக் கட்டண ரசீது (Telephone Bill)
• வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card)
• இருப்பிடம் சார்ந்து கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்று (Certificate of Residence issued by VAO)
• மாநில அரசு/ மத்திய அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை (ID card issued by State Government/Central Government/ Public Sector Undertaking)
4. பிற சான்றுகள் (ஏதேனும் ஒன்று)
• நலிவடைந்த பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (வருமான சான்று)
• வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (சாதிச் சான்றிதழ்)
• வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (ஆதரவற்றவர் / எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் / மாற்றுத் திறனாளிகள் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை எனில் அதற்கான சான்று)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 20, 2018; 10:00 am]
[#NEPR/2018042001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|