காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 30 வணிகர்களுக்கு தொழில் பயன்பாட்டுக் கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு துவக்க விழா, சமய நல்லிணக்க விழா, 30 நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை உள்ளடக்கி - முப்பெரும் விழா 13.04.2018. அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடைய தந்தை அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன், அன்று 09.00 மணியளவில் காலமானதையடுத்து, அவ்விழா ஒத்திவைக்கப்பட்டு, அதே நிகழ்ச்சி நிரல் படி 17.04.2018. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில், நெய்னார் தெருவில் – பெரிய குத்பா பள்ளிக்கு எதிரில், ஸ்டார் எம்.ஏ.சுலைமான் ஹாஜியார் நினைவு மேடையில் நடைபெற்றது.
அவ்வமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். அதன் கவுரவ ஆலோசனைக் குழு உறுப்பினர்களான நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, காலமான மர்ஹூம் அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களது மஃக்ஃபிரத்திற்காக ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் காமில் துஆ இறைஞ்சினார்.
கற்புடையார் பள்ளி இமாம் ஹாஃபிழ் ஏ.எஸ்.ஐ.முஹம்மத் அப்பாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும் – காயிதேமில்லத் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவருமான எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ வரவேற்புரையாற்றினார்.
ஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான், எஸ்.எம்.முஹம்மத் ஷமீம் ஆகியோர் சன்மார்க்க இன்னிசை பாடினர்.
அமைப்பின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, பொருளாளர் முத்து இப்றாஹீம், துணைத் தலைவர் கே.எம்.உமர் ஃபாரூக் ஆகியோர் அவையோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
விழா தலைவர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் தனது வாழ்த்துரையைக் கவிதையாக வழங்கினார்.
அமைப்பின் ஆண்டறிக்கையை – விழாக் குழு தலைவர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் சமர்ப்பித்தார்.
அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் நிறைவுப் பேருரையாற்றினார்.
உரைகளைத் தொடர்ந்து, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அமைப்பின் 30ஆவது ஆண்டு துவக்க விழாவை நினைவு கூரும் வகையில், நகரில் வணிகம் செய்யும் - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 30 பேருக்கு இவ்விழாவின்போது தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவிகளாக சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் கே.எச்.எம்.முஹம்மத் உமர் ராஃபிஃ நன்றி கூற, பெரிய குத்பா பள்ளியின் இமாம் ஹாஃபிழ் நத்ஹர் ஷா துஆவுடன் விழா நிறைவுற்றது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரான கே.எம்.டீ.சுலைமான், எஸ்.எம்.பி.மஹ்மூத் தீபி, எஸ்.ஏ.தவ்ஹீத், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், குளம் ஹபீப் முஹம்மத், ஏ.எம்.டீ.சுலைமான், அன்நூர் நிஜாம், ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கே.எம்.டீ.அபூபக்கர் சித்தீக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
|