கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் எனவும், காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் உள்ளதாகவும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட, மற்றும் பின்தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் இருந்து, புத்தகம், சீருடை, போக்குவரத்து உட்பட வேறு எந்த கட்டணத்தையும் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க கூடாது.
ஒரு பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பில் இருந்து (LKG அல்லது ஒன்றாம் வகுப்பு) பள்ளிக்கூட அனுமதி ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு (LKG அல்லது ஒன்றாம் வகுப்பில்) அனுமதிக்கப்பட்ட மாணவர் - தனது 14 வயதை பூர்த்தி செய்யும் வரை, இலவச கல்வியை தொடரலாம்.
இந்த திட்டத்தின் கீழான விண்ணப்பங்கள் நாளை (ஏப்ரல் 20) முதல் மே 18 வரை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கல்வி அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
ஒரு பள்ளிக்கூடத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மேலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், மே 23 அன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மே 29 அன்று மாணவர் சேர்க்கை நிறைவு பெறும்.
இந்த திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தில் உள்ள ஏழு பள்ளிக்கூடங்களின் LKG வகுப்புகளில் காலியாக உள்ள இடங்கள் விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது:
(1) எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - 30 இடங்கள்
(2) சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி - 15 இடங்கள்
(3) முஹைதீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - 15 இடங்கள்
(4) அல் அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி - 8 இடங்கள்
(5) ரஹ்மானியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி - 8 இடங்கள்
(6) காட்நீதன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி (அருணாச்சலபுரம்) - 8 இடங்கள்
(7) ஸ்ரீ சத்திய சாய் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி (லட்சுமிபுரம்) - 8 இடங்கள்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 19, 2018; 6:00 pm]
[#NEPR/2018041902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|