2018-ஆம் ஆண்டின் உலக புத்தக நாளை முன்னிட்டு, சிறார்களுக்கான கதைசொல்லல் நிகழ்வு ஒன்றினை கண்ணும்மா முற்றம் & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைந்து 21.04.2018 அன்று ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை கீழே:
கண்ணும்மா முற்றம் & அரசு பொது நூலகம்
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் 'கண்ணும்மா முற்றம்', குழந்தைகளிடம் இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.
காயல்பட்டினம் அரசு பொது நூலகம் பல்வேறு தளங்களில் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் நற்பணிகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இவ்விரு அமைப்புகளும் இணைந்து பள்ளி மாணவர்களுடன் புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா & ‘குட்டி ஆகாயம்’ கதைசொல்லல் நிகழ்வு ஆகியவற்றை சிறப்புற நடத்தின.
உலக புத்தக நாளை முன்னிட்டு...
ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 23 அன்று, உலக புத்தக நாள் கொண்டாப்படுகிறது. அவ்வகையில், இவ்வாண்டின் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சிறப்பான கதைசொல்லல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ், வருகின்ற ஏப்ரல் 21 சனிக்கிழமையன்று, பெங்களூரை சார்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழுவின் திரு ஜெயக்குமார் & திருமதி ஷர்மிளா ஜெயக்குமார் ஆகியோர் பங்குபெறும் சிறப்பு கதைசொல்லல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில், பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் குறித்த அறிமுகம், கதைசொல்லல், பாடல்கள் & விளையாட்டுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வானது காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் அரசு பொது நூலகத்தில் வைத்து நடைபெறுகிறது. முன்பதிவு செய்யும் குழந்தைகளுக்கு நுழைவு இலவசம்.
கூடுதல் தகவல்களுக்கு…
நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கும் & முன்பதிவு செய்வதற்கும், சிறார்கள், பள்ளி ஆசிரியர்கள் & பெற்றோர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினைரை (கீழே அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன) தொடர்பு கொள்ளலாம்.
முஜீப் (நூலகர்): 9894586729
கத்தீப் மாமூனா லெப்பை: 7904098006
கே.எம்.டீ.சுலைமான்: 9486655338
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> கண்ணும்மா முற்றம், சுபைதா துவக்கப்பள்ளி & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைந்து நடத்திய ‘குட்டி ஆகாயம்’ கதைசொல்லல் நிகழ்வு!!
(24.11.2017 & 25.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=20003)
2> “பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!! அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம்!! எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!
(22.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19944)
3> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!
(07.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19883)
4> சிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
5> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|