காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 17 அன்று 29ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு விளக்கவுரையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் செயலர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
அன்று, சட்டமேதை ஷாஃபிஈ இமாம் நினைவு சிறப்பு நாள் என்பதால், அன்னாரின் வாழ்க்கைச் சரித உரையை, தொடர்ந்து, சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சரித உரையை, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ நிகழ்த்தினார்.
ஷஃபான் 01ஆம் நாள் (ஏப்ரல் 18) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் / முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்குகிறார்.
தொடர்ந்து, கூட்டு துஆவின் சிறப்புகள் குறித்து, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ உரை வழங்குகிறார்.
நிறைவாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ அல்லாமா செய்யித் அஹ்மத் இப்னு ஜைனீ தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரி ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ – தமிழாக்கத்துடன் ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்.
இதர நிகழ்ச்சிகள், கீழ்க்காணும் நிகழ்முறைப்படி நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|