காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகிலுள்ள நியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்துவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகில் ரேஷன் கடை உள்ளது. இதன் பதிவு எண் -CD006. இந்த கடையின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தி உள்ளது.
இங்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும் மக்களை நிர்பந்தம் செய்து - சோப்பு, டீத்தூள், முருங்கை உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இப்பொருட்களை வாங்காவிட்டால், பிற பொருட்கள் தர படாது என அக்கடையினை நிர்வகிக்கும் பொறுப்பாளர் தெரிவிக்கிறார். இது குறித்து விசாரித்தபோது, தங்களுக்கு அப்பொருட்களை விற்பனை செய்ய மேலதிகாரிகள் இலக்குகள் நிர்ணயம் செய்திருப்பதாக பொறுப்பாளர் தெரிவிக்கிறார்.
மேலும் - இக்கடையில் வாங்கப்படும் பொருட்களின் அளவும், சோதித்துப் பார்த்தப்போது குறைவாக உள்ளது.
எனவே - இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 16, 2018; 5:00 pm]
[#NEPR/2018041604]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|