கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெறுவதற்கு, இணையதளத்தில் (ஆன்லைன் முறையில்) எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார் பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14 வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இன்று (ஏப்ரல் 20), இந்த திட்டத்தின் கீழான விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நிரப்ப முகவரி:
http://www.dge.tn.gov.in
இணையவழியில் - இந்த விண்ணப்பத்தை எளிதாக நிரப்பும் வகையில் - இதற்கான பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
// பள்ளியில் சேர விரும்பும் மாணவர் மற்றும் அவர் பெற்றோர், சேர விரும்பும் பள்ளிக்கூடங்கள் என 16 வகையான தகவல்கள் மட்டும் கோரப்படுகின்றன.
// இது தவிர - மாணவரின் புகைப்படம், வயதுக்கான ஆதாரம் (ஓர் ஆவணம்), இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஓர் ஆவணம்) மற்றும் சிறப்பு பிரிவுக்கான ஆதாரம் (ஓர் ஆவணம்) மட்டும் சமர்ப்பித்து,
சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையென சான்றளித்து - தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் - ஒப்புதல் தகவல் உடனடியாக வரும்.
// விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவல் - மே 22 மாலை 5 மணிக்குள், பள்ளிக்கூடங்களில் தகவல் பலகையில் பார்க்கலாம்
காலியிடங்களுக்கு கூடுதலாக தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், மே 23 அன்று அரசு துறை அதிகாரிகள் முன்பு குலுக்கல் முறையில் மாணவர் தேர்வுசெய்யப்படுவர்.
மே 29 அன்று எவ்வித கட்டணமும் இல்லாமல், தேர்வு செய்யப்பட்ட மாணவருக்கு - பள்ளிக்கூடத்தில் அனுமதி வழங்கப்படும். தனது 14 வயதை பூர்த்தி செய்யும்வரை, அந்த பள்ளிக்கூடத்தில் - அந்த மாணவர், இலவச கல்வி பெறலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 20, 2018; 10:00 pm]
[#NEPR/2018042003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|