காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி, 19.04.2018. அன்று நேர்ச்சை வினியோகத்துடன் நிறைவுற்றது.
ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் நிறைவு செய்த பின்னர், மஜ்லிஸ் நிர்வாகிகளிடம் அந்தந்த ஆண்டின் வைபவக் கமிட்டியினர் பொறுப்புகளை ஒப்படைக்க, அன்று இரவு திக்ர் மஜ்லிஸுடன் அந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் நிறைவுறும்.
அதன் படி, நடப்பாண்டின் நிறைவு நிகழ்ச்சி, 22.04.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் ஜெ.எஸ்.அல்தாஃப் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, புகாரி ஷரீஃப் மேலாளர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவுசெய்தார்.
தொடர்ந்து, எஞ்சிய சாமான்கள் ஏலம் விடப்பட்டு, அதில் பெறப்பட்ட நிதி கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. ஏல நிகழ்ச்சியை எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.), எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் நடத்தினர்.
|