காயல்பட்டினம் நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றிய அனைவருக்கும், கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 32ஆவது பொதுக்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 16.03.2018. வெள்ளிக்கிழமையன்று கத்தரில் நடைபெற்றது. ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். கத்தர் காயல் நல மன்றத்தின் ‘கவிக்குயில்’ ஃபாயிஸ் இஸ்லாமிய இன்னிசை பாடினார்.
மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தலைமையுரையாற்றினார். கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்தில் இதுநாள் வரை நடத்தப்பட்ட பல்வேறு நகர்நலத் திட்டப் பணிகளில் இணைந்து செயலாற்றிய காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பு, உறுதுணையாக இருந்த இதர காயல் நல மன்றங்கள், காயல்பட்டினம் நகரின் சமூக ஆர்வலர்கள், இக்ராஃ, ஷிஃபா ஆகிய அமைப்புகளின் கல்வி – மருத்துவ சேவைகளில் இணைந்து செயலாற்றிய அனைத்துலக காயல் நல மன்றங்கள், தனியார்வலர்கள் அனைவருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார்.
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு – செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஒப்புதலைப் பெற்றார்.
முன்னிலை வகித்த – மன்றத்தின் முன்னாள் தலைவர்களும், நடப்பு ஆலோசகர்களுமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், எம்.என்.முஹம்மத் யூனுஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ உடைய துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. வசிப்பிடம் திரும்பும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்.)
[படங்கள் இணைக்கப்பட்டன @ 07:52 / 26.04.2018.] |