2018ஆம் ஆண்டின் - ARR கோப்பைக்கான வி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப் போட்டிகளின் முதல் நாள் போட்டிகளது முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் 2018 : ஜுனியர், சப்ஜுனியர்ஸ் முதல் நாள் போட்டி முடிவுகள்!
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் நேற்று (23/04) துவங்கின.
நேற்று (23/04) மாலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Smile Soccers அணியும், Faams அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Smile Soccers அணியின் Haneefa Mujahideen தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்டியில் Kayal United அணியும், Yousuf United அணியும் விளையாடின.
இப்போட்டியில் Kayal United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Kayal United அணியின் இத்ரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்டியில் TGJ Soccers அணியும், Hameed Stars அணியும் விளையாடின.
இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக ஆக்கிஃப் அலி தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Muhyideen Rainers அணியும், Kayal Manchester அணியும் விளையாடின.
இப்போட்டியில் Muhyideen Rainers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
அந்த அணிக்காக உஸைர் ஒரு கோலடித்தார். இப்போட்டியின் சிறந்த வீரராக ஷாம்சிகாப்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக காலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Yousuf United அணியை எதிர்த்து Knight Riders அணியினர் விளையாடினார்கள். இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Danube Coolers அணியும் Mohideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டி கோல்ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் LTS GA Soccers அணியும் Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டியில் LTS GA Soccers அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக ஃபயாஸ் கோலடித்தார்.
துவக்க நாள் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் கால்பந்து வீரர் சகோ. அன்சாரி, சகோ. சேக் மற்றும் ஆசிரியர் திரு. ஆனந்தகூத்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|