100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பள்ளிக்கூடங்கள், பொது நல அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.
இந்த சட்டத்தின்கீழ் - இவ்வாண்டு, நுழைவு வகுப்பில் (LKG/முதல் வகுப்பு), காயல்பட்டினம் நகரில் உள்ள பள்ளிக்கூடங்களில், கட்டாய - இலவச கல்வி பெற, 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய, பள்ளிக்கூடங்களும், பொது நல அமைப்புகள் சில பணிகளை செய்வது அவசியமாகும்.
===================
பள்ளிக்கூடங்களின் பங்கு
===================
// பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைபடி, நகர பள்ளிக்கூடங்கள் - தங்கள் பள்ளியில் உள்ள கட்டாய - இலவச கல்வி திட்டத்தின் கீழான இடங்கள் விபரத்தை தங்கள், பள்ளிக்கூடங்களின் தகவல் பலகையில் (NOTICE BOARD) வெளியிடவேண்டும். இன்றைய தேதி வரை, அந்த விபரங்களை எந்த பள்ளிக்கூடமும் வெளியிட்டதாக தெரியவில்லை
// பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைபடி, நகர பள்ளிக்கூடங்கள் - தங்கள் பள்ளியில் உள்ள கட்டாய - இலவச கல்வி திட்டத்தின் கீழான இடங்கள் விபரத்தை தங்கள், பள்ளிக்கூடங்களின் நுழைவு வாயிலில் FLEX பதாகை வாயிலாக வெளியிடவேண்டும். இன்றைய தேதி வரை, எந்த பள்ளிக்கூடத்திலும் FLEX பதாகைகள் நிறுவப்படவில்லை
// அரசு சுற்றறிக்கை கோரியுள்ளதையும் தாண்டி, சுற்றுவட்டாரங்களில் - இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வை, பெற்றோர்களிடம் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தவேண்டும். இந்த நடவடிக்கை, பள்ளிக்கூடங்கள் மீது பொது மக்கள் வைத்துள்ள மரியாதையை அதிகரிக்க உதவும்
// இந்த சட்டத்தின்கீழ், புத்தகங்கள், சீருடை உட்பட எந்த கட்டணமும், மாணவர்கள் - செலுத்த அவசியம் இல்லை. இந்த கட்டணங்களை, அரசே - பள்ளிக்கூடங்களுக்கு தருகிறது. எனவே, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் - இதனை பள்ளிக்கூடங்கள் தெளிவுபடுத்தவேண்டும்.
// 2013 - 2014 ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்த சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கை - மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு முதல், இந்த திட்டத்தின் கீழ், பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு - இந்த திட்டம் வழங்கியுள்ள சலுகைகள் (இலவச கல்வி, புத்தகம், சீருடை, போக்குவரத்து) மறுக்கப்படாமல் வழங்கப்படவேண்டும்
// இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், நுழைவு வகுப்பில் படிக்கும்போதோ, உயர் வகுப்புகளில் படிக்கும்போதோ, இடையில் விலகி, வேறு பள்ளிக்கு சென்றால், அந்த காலியிடத்தை - பள்ளிக்கூடங்கள், வெளிப்படையான முறையில் நிரப்பவேண்டும்
=======================
பொது நல அமைப்புகளின் பங்கு
=======================
// கட்டாய - இலவச கல்வி சட்டம் குறித்து அனைத்து வகைகளிலும் பொது மக்களிடம் விழிப்புணரவு பிரச்சாரங்களை, நகர பொது நல அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்
// இந்த சட்டத்தின் கீழ், அனுமதி பெற மாணவர்கள்/பெற்றோர்கள் ஏதும் சிரமத்தை சந்தித்தால், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை நகர பொது நல அமைப்புகள் வழங்கவேண்டும்
// கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிக்கூடங்கள் - சில ஆவணங்களை பராமரிப்பது கட்டாயமாகும். அந்த ஆவணங்கள் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை, பொது மக்களும், பொது நல அமைப்புகளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று, இந்த சட்டம், குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யலாம்.
Registers to be maintained:
1) Total No, of Students admitted in Entry Level Class
2) Total No. of application issued under 25% (with Name list)
3) List of students selected under 25% (admission category)
4) Reimbursement claimed register
Form- I: Details of Admission against 25% Reservation Seats at the Entry Level Classes for the Academic Year --------------------- under RTE Act,2009
Form- IV: Return Statement to be submitted to the DEEO/DEO/IMS for the year -------------------
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் - பொது தகவல் அலுவலர் ஆவார்; பள்ளிக்கூட தாளாளர் - மேல்முறையீட்டு அலுவலர் ஆவார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 22, 2018; 10:00 am]
[#NEPR/2018042201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|