கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவ-மாணவியருக்கு இடங்கள் உள்ளன என்ற தகவலை விளக்கி, அந்தந்தப் பள்ளிக்கூடங்கள் விளம்பரப் பதாகைகளை பொதுமக்கள் பார்வைக்கு நிறுவ வேண்டும் என்ற அரசு அறிவிப்புத் தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார் பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14 வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் (RTE) கீழ், இணையவழி மாணவர் சேர்க்கை - நேற்று (ஏப்ரல் 20) துவங்கியது. இந்த சட்டத்தினை முழுமையாக அமல்படுத்தி, 100 சதவீத மாணவர் சேர்க்கையை எட்டிட - பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும், சுற்றறிக்கை (CIRCULAR) ஒன்றினை அனுப்பியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசாணைப்படி, 2013-14 ஆண்டு முதல், சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றுவருகின்றன. RTE சட்டத்தின்கீழ், LKG / FIRST STANDARD வகுப்பில் உள்ள காலியிடங்கள் விபரங்கள், பள்ளிக்கூடங்களின் தகவல் பலகையில் (NOTICE BOARD) வெளியிடப்படவேண்டும். இது தவிர - முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம் ஆகியவற்றின் தகவல் பலகையிலும் வெளியிடப்படவேண்டும்.
பள்ளிக்கூடங்களின் நுழைவாயிலில், சட்டத்தின் மூலமான மாணவர் சேர்க்கை குறித்த தகவலும் FLEX பதாகை மூலம் தெரிவிக்கப்படவேண்டும்.
As per the Government Order (GO), RTE admissions are being filled in the private schools in the State since the year 2013-14. All the vacancies in LKG or Class 1 under RTE should be displayed on the notice boards of the private schools, office of CEO, District Education Officer (DEO), IMS, DEEO, Assistant Elementary Education Officer (AEEO) and Sarva Shiksha Abhiyan (SSA) in the State. Flex boards should be placed in front of the private schools regarding the Right to Education (RTE) admissions.
பள்ளிக்கூடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளியில் சேர முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அவ்வாறு - 1 கிலோமீட்டர் தூரத்திற்குள் மாணவர்கள் விண்ணப்பம் செய்யவில்லையென்றால், அருகாமை பகுதி மாணவர்கள், சேர்க்கப்படவேண்டும்.
பள்ளிக்கூடங்களில் நேரடியாக மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பங்களை பள்ளிக்கூடங்கள் பெற்றுக்கொண்டு ஒப்புதல் ரசீது (ACKNOWLEDGEMENT RECEIPT) வழங்கவேண்டும். அதன் பிறகு, பள்ளிக்கூடங்கள், அந்த விண்ணப்பங்களை, இணையவழியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
அனாதை குழந்தைகள், HIV நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்று திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு - பள்ளிக்கூடங்கள், சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 21, 2018; 9:00 am]
[#NEPR/2018042101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|