Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:58:41 AM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20440
#KOTW20440
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 21, 2018
சமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2403 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் 18.04.2018. புதன்கிழமையன்று அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிகாலை நிகழ்ச்சிகள்:

அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் ஷெய்க் அப்துல்லாஹ் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப்பள்ளி ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ நிறைவுநாள் பாடத்தை ஓதித் துவக்கி வைத்தார்.

காலை நிகழ்ச்சிகள்:

அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ உரையாற்றினார்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன், இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, விவசாய நல்விளைச்சல், விவசாயிகளுக்குப் பாதுகாப்பு, நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்துகொண்டனர்.

பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:

காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.



















பிரமுகர்கள் பங்கேற்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் – தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அதன் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – சட்டமன்றக் கட்சித் தலைவரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய அரசியல் பிரமுகர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு மஜ்லிஸ் நிர்வாகம் & நிகழாண்டு வைபவக் கமிட்டியின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

















இட வசதி:

ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.











































பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.

துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:

சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.



பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டீ. மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரிலிருந்து தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.



போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அரபிக் கல்லூரிகளுக்கு விடுமுறை:

அபூர்வ துஆ பிரார்த்தனையை முன்னிட்டு, அன்று காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரி, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு உள்ளிட்ட மத்ரஸாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கோடை விடுமுறையாதலால், பள்ளிக்கூடங்கள் பல ஏற்கனவே விடுமுறையில் இருந்தமையும், சில வகுப்புகளுக்கு மதியம் ஆண்டிறுதித் தேர்வு நடைபெற்றதால் காலையில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாலை நிகழ்ச்சிகள்:

16.45 மணிக்கு, நபிகள் நாயகம் மீது சுப்ஹான மவ்லித் ஓதும் மஜ்லிஸ் நடைபெற்றது. குருவித்துறைப் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் மன்பஈ தலைமையேற்க, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மக்தப் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.

17.35 மணிக்கு எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இரவு நிகழ்ச்சிகள்:

19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது.

21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் பிஸ்தாமீ ரிஃபாஈ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ வழங்கினார்.

‘அக்கு ஹீலர்’ ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, மவ்லவீ சொளுக்கு ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மறுநாள் (19.04.2018. வியாழன்) 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.











அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், துணைத்தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், மேலாளர் மவ்லவீ என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, இணைச் செயலாளர்களான கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், கே.எம்.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், துணைச் செயலாளர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகிய நிர்வாகிகளும், வைபவக் கமிட்டி தலைவர் என்.டீ.பாதுல் அஸ்ஹப் தலைமையில் – மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ உள்ளிட்ட வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நிறைவுநாளன்று நடைபெற்ற அபூர்வ துஆ பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்பட்டது. அதே இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து, நடப்பாண்டின் பழைய உரைகள், கடந்தாண்டின் அனைத்து உரைகளையும் கேட்கவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

படங்கள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ & நோனா உவைஸ்
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நாடு வளம் பெற நீராதாரம் பெருகிட...
posted by mackie noohuthambi (dubai) [22 April 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46143

அருமையான பிரார்த்தனை. நமது தாய் திருநாடு வளம்பெற நீராதாரம் பெருகிட விவசாயம் செழித்திட லஞ்ச லாவண்யம் ஊழல் ஒழிந்திட சமய நல்லிக்கம் நிலைத்திட,, இப்படி நம் நாட்டில் நிலவும் பல்வேறு சார்பாக கேடுகள் ஒழிந்திட ஆலிம் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த வசனங்களை உரத்த குரலில் சொல்லும்போது கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆமீன் சொல்லிட மிக அருமையாக அமைந்துள்ள இந்த பிரார்த்தனை ஸீடீ ஒன்றை ஹிந்தி மொழி பெயர்ப்போடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

முஸ்லீம் எவ்வளவு நாட்ட பற்றோடு இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ள இது அவசியம் காலத்தின் கட்டாயம் ஆலிம் அவர்களின் து ஆவை அல்லாஹ் காபூல் செய்து அருள்புரிவானாக செய்வானாக ஆமீன் ,,

ஆலிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved