இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 12-ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மேமாதம் 31 ஆம் நாளன்று ,வியாழக்கிழமை) 5.30 மணியளவில்,அபூதபீ CARAVAN RESTAURANT-PARTY ஹாலில் மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
இஃப்தார் நிகழ்ச்சியில் பேரீச்சைபழம் மற்றும் சுவை மிகுந்த பழ வகைகள், வடை, சமோசா, சிக்கன் பக்கோடா,வெங்காய பக்கோடா,சிக்கன்டிக்கா பிஃரைஸ், கடற்பாசி , குளிர் பானங்கள், இனிப்பு வகைகள் ,மற்றும் தேனீர் பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7:45 மணியளவில் மன்ற 12- ஆவது பொதுகுழு கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். இளவல் ஹபீப் ரஷாத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்பு மற்றும் மன்றத்தலைவர் உரை
வந்தோரை அகமகிழ்வோடு மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர்,மன்றச் செயல்பாடுகளில் குறிப்பாக மன்ற மூலம் செய்து வரும் சேவைகளை நினைவுக்கூறி இவ்வாண்டு மன்றம் மற்றும் உறுப்பினர்களின் தனியான அனுசரணையால் 116 குடும்பங்களுக்கு நோன்பு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் தாய்லாந்து மன்றத்தோடு இணைந்து ஆண்டுதோறும் நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை மற்றும் கத்தார் நலமன்றத்துடன் கைகோர்த்து 50 ஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை தலா 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி செய்திட்ட அபூதபீ காயல் நலமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில்ஈடுபட்ட அனைவர்களுக்கும்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இன்ஷாஅல்லாஹ் வரும் AUG-19,ஞாயிற்றுக்கிழமை நம் மன்றம் நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை முதலுதவி பயிற்றுவிக்கிக்கும் மருத்துவர்களோடு இணைந்து முதலுதவி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நகரில் நடத்திட அதற்கான பணிகள் நடந்துவருவதாய் அறிவிப்பு செய்தார்.
சில குறிப்பிட்ட பெரிய அளவிலான மக்களுக்கான நலத்திட்டங்களில் துபாய் காயல் மன்றத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது குறிக்கோள்கள் மக்களை சென்றடையும் என்பதையும் விளக்கமாக உறுப்பினர்களோடு பகிர்ந்துகொண்டார்கள்
மவ்லவீ எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உரை
தொடர்ந்து மன்றப் செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் நமது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது அனைவர் மீதும் கடமை என்றும் உறுப்பினர்கள் அனைவர்களும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்து மன்றத்தின் திட்டங்களுக்கு துணைநிற்க்குமாறு கேட்டுக்கொண்டார்..
(2018) ரமழான் நோன்பை முன்னிட்டுஅபூதபீ காயல் நல மன்றத்தின்சார்பில் 116 ஏழைக் குடும்பத்திற்கு கீழ்க்கண்ட அரிசி உள்ளிட்ட (34வகையான) நோன்பு காலஅத்தியாவசிய உணவுப்பொருட்களும் அத்துடன்பெருநாளை முன்னிட்டு இவர்கள்அனைவருக்கும்1/2 கிலோ ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது.
நன்றியுரை:
மன்றத்தின் மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்கள் இஃப்தார் மற்றும் பொதுக்குழ அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைவர்களுக்கும் மன்றதின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இறுதியாக ஹாஃபிழ் A.S.முத்து அஹ்மது அவர்கள் துஆ இறைஞ்ச,கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்களும், குடும்பத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இஃப்தார் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும், https://photos.app.goo.gl/MKfVj3TToWwyqGhq1 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |