காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை மீது நடவடிக்கை, காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் சாவடியை அகற்றல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். உரை விபரம்:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2018-2019 நிதி ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவரு மான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசிய தாவது;
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மீன் வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் நான் முதலாவதாகவே பங்கேற்று பேசுவதற்கு வாய்ப் பளித் தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு சில பேர்தான் இருக்கிறோம். அதிலும் நான் ஒருவன் தான் பேச இருக்கிறேன். (குறுக்கீடு) எப்போதும் 20 நிமிடங்கள் பேசுவதற்கு தருவீர்கள். (குறுக்கீடு) புனிதமான நோன்பு காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நல்ல நேரத்தில், சில விளக்கங்கங்களை எனது தொகுதி சம்மந்தப்பட்ட மற்றும் சமுதாய சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை எல்லாம் நான் உங்கள் முன் சொன்னால்தான் இந்த அளவில் விளக்கத்தை பெற முடியும் என்ற அடிப்படையில் , தாராள மனதோடு என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கால்நடை மருத்துவ பயிற்சி நிலையம்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதிநிலை அறிக்கை மற்றும் அரசு கொள்கை விளக்கக் குறிப்புகளை தெளிவாக நானும் படித்து பார்த்தேன். கால்நடை துறையை சம்மந்தமாக கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவ சேவைகளையெல்லாம் செம்மைப்படுத்த வேண்டுமென்ற ஓர் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் எனது கடையநல்லூர் தொகுதியில் பொய்கை மற்றும் கல்லம் புள்ளி பகுதியில் கால்நடை மருத்துவமனையை ஏற்படுத்தி தந்தமைக்கு முதலில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அந்த மருத்துவமனை துவக்க விழாவிற்கு மாவட்ட அமைச்சர், மாண்புமிகு ஆதிதிராவிடர் அமைச்சர் அவர்கள் வருகை தந்தார்கள். அதற்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தொகுதியை பொறுத்த வரைக்கும் அதிகமான கால்நடைகள் இருக்கின்றன. கால்நடைகள் எல்லாம் மழைக்காலங்களில் அதிகமாக நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அரசினுடைய கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அந்தப் பகுதியில் ஏற்படுத்தி தந்தால் நன்மை பயக்கும் என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நாட்டு கோழி வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு பற்றி கொள்கை விளக்க குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனை அதிகமாக பரவலாகப் பட வேண்டும். பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்களை நாம் சந்திக்க நேரிடுகின்றது. எனவே நாட்டு கோழியை வளர்க்க உற்சாகப்படுத்துவது, நம்முடைய அரசினுடைய தலையாய நோக்கமாக இருக்க வேண்டுமென்பதையும் நான் இங்கே வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
மகாராஷ்டிராவில் ஆவின்பால்
ஆவின் பால் பொருட்கள், மொத்த உற்பத்தியாளர்களைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டிருக்கின்றது. ஆவின் பால் பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. நம் தமிழ் மக்கள் அதிகமாக வாழக்கூடிய மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் அதை நீங்கள் விரிவுப்படுத்தினால் ஆவின் பால் பொருட்களை அவர்களும் வாங்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்படும். சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற் பனையை நீங்கள் விரிவுப்படுத் தியிருக்கக்கூடிய நிலையில்........
மாண்புமிகு உடுமலை கே. ராதா கிருஷ்ணன்:
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும் போது நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகளவில் பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுடைய அரசு மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்படியார் தலைமையில் எதையெல்லாம் செய்தால் சரியாக இருக்கும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடு வார்கள் என்கின்ற நல்ல செய்தியை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வளைகுடா, ஹாங்காங் நாடுகளில் ஆவின்பால் பொருட்கள்
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆவின் பால் பொருட்கள் விற்பனைக்காக சிங்கப்பூருக்கு ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது. நம்முடைய மக்கள் வாழ்கின்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் யூ.ஏ.இ. நாடுளுக்கும், அதேபோன்று ஹாங்காங் மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கும் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை விரிவுபடுத்தினால் நம் மக்களும் பயன்பெறுவார்கள் என்பதால் இதை வேண்டுகோளாக இங்கே வைக்க விரும்புகிறேன்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள்
மீனவர்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் இங்கே கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டம் என்கிற ஒரு திட்டம் கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பரவலாக எங்கேயெல்லாம் இதுபோன்ற அபாயங்கள் மீனவர்களுக்கு ஏற்படுகிறதோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, தற்போது பரபரப்பாக பேசக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கக்கூடிய திரnஸ்புரம் பகுதியில் மீனவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களும் அந்த கடலோர பேரிடர் அபயாக் குறைப்புத் திட்டத்தில் பயன்பெறுகிற வகையில் அந்தத் திட்டங்களை எடுத்துச்செல்ல வேண்டும். மீனவளம் குறித்த மானியக் கோரிக்கை இது என்பதால் ஸ்டெர்லைட் ஆலை இருக்கக்கூடிய திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் இதுநாள் வரையில் தொழிலுக்கு செல்லாமல் இருக்கிறார்கள். சில கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 3 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துவதாக அறிகிறேன். எனவே, திரேஸ்புரம் பகுதியிலுள்ள மீனவர்கள் எல்லோரும் மீன் பிடித் தொழிலுக்கு செல்லக்கூடிய நடவடிக்கைகளில் நம் அரசு கவனம் செலுத்த வேண்டுமென்பதையும் இங்கே கோரிக்கையாக வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கத்தார் அம்பாஸிட்டர் கூறியது
அண்மையில் நான் கத்தார் நாட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அம்பாஸிடராக இருக்கக்கூடியவர் மதுரையை சார்ந்தவர். அவர் என்னிடத்தில் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதை இந்த அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருவதாக நான் அவரிடத்தில் தெரிவித்திருந்தேன்.
வெளிநாடுகளுக்கு செல்லும் மீனவர்கள்
மீனவர்கள் வெளிநாடு களுக்கு வேலைக்குச் வருகின்ற போது, எந்தவிதமான முன்னேற் பாடுகள் இல்லாமலும், விழிப்புணர்வு இல்லாமலும், வேலைக்கு வந்தபின்னர் பணிபுரிபவர்களுக்கிடையே ஏற்படும் சங்கடங்கள் குறித்தெல்லாம் தெரியாமலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு வந்துவிடுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார். எனவே, வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் உரிய விழிப்புணர்வோடு வேலைக்குச் செல்வதற்கு உரிய திட்டத்தினை மீன் வளத்துறை ஏற்படுத்தித் கொடுத்தால் நன்மை பயக்கும் என்பதை இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மீன் கிடைத்தும் சாப்பிட முடியவில்லை
அதே போல, மீன்கள் பல்வேறு ஊர்களில் கிடைக் கின்றன. சில ஊர்களில் மட்டும் கிடைக்கக்கூடிய மீன்களை அந்த ஊர் மக்களே சாப்பிட முடியாத அளவிற்கு வெளியூர்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறார்கள். அந்த மீன் வகைகள் வெளியில் விற்பனைக்கு சென்று விடுவதால், உள்ளூர் மீன் வகைகளை, சொந்த மண்ணைச் சார்ந்த மக்களே சாப்பிட முடியாத நிலைதான் இருக்கிறது. மீன் கிடைக்கக்கூடிய ஊர்களில் அந்த மீன்கள் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெளியூரிலிருந்து மீனவர்கள் வந்து மீன்பிடித் தொழிலை செய்வதால் உள்ளூர் மக்களிடம் குரோதங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே, மீன்கள் எங்கே கிடைக்கின்றவோ அந்த ஊரில் 50 சதவிகிதம் விற்பனை செய்வதற்குரிய வழிவகைகளை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்தீர்கள் என்றால் மீனவர்கள் அந்த ஊர்களில் தொழில் செய்வதற்கு வசதியாக இருக்கும். உள்ளூர் வாசிகளுக்கும், வெளி யூரிலிருந்து மீன்பிடித் தொழில் செய்ய வரும் மீனவர்களுக்கும் எந்தவிதமான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும்.
காயல்பட்டினத்தில் பிடிக்கும் மீன்கள்
எனது சொந்த ஊரான காயல்பட்டினத்திலும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது. அங்கே பிடிக்கக்கூடிய மீன்கள் அனைத்தையும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக ஏற்றுமதி செய்து விடுகிறார்கள். காயல்பட்டினத்திற்கு வெளியூரிலிருந்து மீன்கள் விற்பனைக்காக வருகிறது. அதனால், அந்த மீன்பிடி தொழிலில் இருப்ப வர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, எங்கே மீன் பிடிக்கப் படுகிறதோ அந்த ஊர்களில் 50 சதவிகிதம் மீன்களை விற்பனை செய்வதற்குரிய வழி முறைகளை, வழிகாட்டுதல்களை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்பதைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு டி. ஜெயக்குமார்:
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, பொதுவாக நம்முடைய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மூலமாகத்தான் இந்திய நாட்டிற்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன்மூலம் நம்முடைய பொருளாதாரம் உயரும். 4500 மெட்ரின் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைத்தான் நீங்கள் தடுக்க வேண்டுமென்று சொல்கிறுர்களா? நம்முடைய மீனவர்களுக்குத்தான் இந்த வருமானம் கிடைக்கிறது. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய பாய்க்கு 100 சதவீதம் மீன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
அதனால் நாம் அதைத் தடுத்துவிட்டு, உள்ளூரிலேயே முழுமையாக மீன் விற்பனை செய்ய வேண்டுமென்றால், அப்பொழுது அவருடைய வாழ்வாதாரமும் கண்டிப்பாக போய்விடும். இறால் ஏற்றுமதி செய்ய முடியாது. கடல்மான் என்று சொல்லக்கூடிய அந்த நல்ல மீனை ஏற்றுமதி செய்ய முடியாது. அதே போல கூரயே என்ற மீனை ஏற்றுமதி செய்ய முடியாது. அதேபோல பல்வகை மீன்கள் இருக்கிறது. நுநட என்ற மீனை ஏற்றுமதி செய்ய முடியாது. மனிதனுக்கு புரதம் இன்றியமையாதது. அந்த புரதத்தை வழங்கு வதற்கு வேண்டிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப் பட்டிருக்கிறது. நம்முடைய உறுப்பினர்கள் அவர்களின் இந்தக்கோரிக்கைக் குறித்து அரசு பரிசீலித்து முழுமையான அளவுக்கு 100 சதவீதம் அளவுக்கு அங்கேயே மீன்கள் கிடைப்பதற்கு வேண்டிய- வேறு வழியெல்லாம் இருக்கிறது. டி.என்.எப்.டி.சி. மூலமாக உங்கள் ஊரில் எக்ஸ்ட்ரா ஸ்டால் கூட போடலாம். முழுமையாக அந்த இடத்தில் 100 சதவீதம் அளவுக்கு மீன் கிடைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும். நம்முடைய பாய்க்கு முழுமை யாக 100 சதவீதம் மீன் கிடைப் பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும்.
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர்:
மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் அவர்கள்.
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, அதேபோல அங்கே, என் னுடைய சொந்த ஊர் காயல் பட்டினம்......
வெளிநாடுகளில் பால்பொருட்கள் ஏற்றுமதி
மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி:
மாண்புமிகு கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசுகின்றபொழுது வளைகுடா நாடுகளுக்கு ஆவின்பால் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற தகவலைச் சொன்னார். தமிழகத்தில் பால் கொள்முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்நாட்டு சந்தையின் தேவை மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் தேவையை மனதில் கொண்டு ஆவின் பொருட்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய ஜெயலலிதா அரசு, அண்ணன் எடப்பாடி தலைமையிலான அரசு திட்டமிட்டது. முதல் முயற்சியாக சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்றுமதி முகவர்கள் நியமிக்கப்பட்ட கடந்த 24-11-2017 அன்று ஆவின் ஒரு லிட்டர் டெட்ரா பேக் பால் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து கப்பல் மூலமாக இதுவரை 84 லிட்டர் டெட்ரா பேக் பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் கேட்டிருக் கிறதுபோல, வளைகுடா நாடுகளிலும் பால் பொருட் களும், பாலும் விற்பனை செய்வதற்காக மலேசியா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், பக்ரெயின், குவைத், சவூதி அரேபியா, இலங்கை, ஓமன், கத்தார், மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலம், மலேசியா, பிரிட்டன், ஐக்கிய அரபு, அமீரகம், ஹாங்காங், கத்தார், பக்ரெயின் குவைத், சவூதி அரேபியா, இலங்கை, ஓமன், ஆப்ரிக்கா, வியட்நாம், சீனா, கம்போடியா, மொரிசீயஸ் ஆகிய 15 நாடுகளுக்கு ஏற்றுமதி முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்நாடுகளில் ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது.
ஆவின் ஏற்றுமதியை ஒரு கொள்கையாக கடைபிடித்து, நடப்பாண்டு இறுதிக்குள் ஆவின்பால் பொருட்களை குறைந்தது 15 நாடுகளில் ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள் கிறேன்.
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர்:
மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் அவர்கள் மறுபடியும் சொல் கிறீர்களா....
மாண்புமிகு டி. ஜெயக்குமார்:
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 4500 மெட்ரிக் டன் அல்ல, 4.97 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி. அதை அவ்வாறு திருத்திக் கொள்ளவும்.
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே,
மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி:
மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பேசுகின்றபொழுது, மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். அங்கேயும் நம்முடைய ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டுமூ என்று சொன்னார். ஏற்கனவே மேற்கு வங்காளம், தெலுங் கானா போன்ற பகுதிகளுக்கு முகவர்கள் நியமிக்கப்பட்டு ஆவின் பொருட்கள் அனுப்பப் பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு முகவர்கள் நியமிக்கின்ற பணி நடந்து வருகிறது. அவர் கூறியிருப்பதைப்போல மகாராஷ்டிராவில் வாழ்கின்ற தமிழர்கள் பகுதிக்கு மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளுக்கு முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு, முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் உள்ள ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுத்து இந்தியா முழக்க ஆவினை நிலை நிறுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்பதை மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்பகள் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
காயல் டி.சி.டபிள்யூ. ஆலை மீது நடவடிக்கை வேண்டும்
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்களுடைய தகவல்களுக்கு நன்றி. பொதுவாக, எங்களுடைய ஊர் காயல்பட்டினத்திலே, தாரங்கதார கெமிக்கல் ஒர்க்ஸ் என்ற ஒரு இரசாயன ஆலை சாகுபுரம் பகுதியில் இருக்கிறது. அதையும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்தான் நடத்துகின்றார்கள். அதனுடைய கழிவுகளை எல்லாம் கடற்கரையிலே செலுத்திவிடுகிறார்கள்.
அந்தக் கழிவுகளை உட்கொள்ளக் கூடிய மீன்களால், மீன்களைச் சாப்பிடக்கூடியவர்களுக்கு கேன்சர், பார்வைக் குறைவு போன்ற நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றது. அந்த இரசாயன ஆலையினுடைய அந்தக் கழிவுகளை கடற்கரையிலே கலப்பதினாலே மிகப்பெரிய அபயாம் ஏற்பட்டிருக்கின்றது. ஸ்டெர்லைட் போன்ற ஒரு ஆலை. அதையும் நீங்கள் கருத்தில் கொண்டு அந்த ஆலை பிரச்சினை அதிகமாகாத அளவுக்கு கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் இங்கே பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
காயல்பட்டினம் காவல் உதவி மையத்தை அப்புறப்படுத்த வேண்டும்
காயல்பட்டினத்தை பொறுத்தவரை இதுவரை அங்கே சினிமா தியேட்டர் இல்லை. மதுக்கடைகள் இல்லை, காவல் நிலையம் இல்லை. இதை நம்முடைய தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள்கூட மிகச் சிறந்த முறையில் பாராட்டி பேசியிருக்கின்றார்கள். 45,000 மக்களைக் கொண்ட அந்த ஊரிலே இதுவரை இதுபோன்ற சினிமா தியேட்டர், மதுக்கடை, காவல்நிலையம் இல்லாமல் இருக்கிறது.
இப்போது சமீபத்தில் காவல் உதவி மையம் என்ற ஒரு மையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அது அங்கே தேவையில்லை. இதுவரை அங்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றது. எனவே அதை அப்புறப்படுத்த வேண்டு மென்று காயல் பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மற்றும் அனைத்து சமுதாய மக்களும் சொல்லியிருக்கிறார்கள். எனவே, அதையும் நீங்கள் கவனத்தில் கொண்டு, அந்த காவல் உதவி மையத்தை அங்கிருந்து அப்புறப் படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு புரட்சிகரமான திட்டங் களை யெல்லாம் செயல்படுத்திக் கொண்டு வருவதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூற்றாண்டு கண்ட கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கடையநல்லூரில் இருக்கின்ற அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வருகின்ற வருடம் 100வது ஆண்டைக் கொண்டாட இருக்கிறது. மிகவும் பெரியதான, 9 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்தப் பள்ளியில் கட்டடங்களெல்லாம் பழமை யானதாக இருக்கின்றன. அங்கே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. எனவே, இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, 100வது ஆண்டை அடையக்கூடிய கடையநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியினுடைய கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணிகளையும், அப்பள்ளியைத் தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்துவதற் குண்டான பணிகளையும் மேற்கொள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான ஏற்பாடு களைச் செய்து தர வேண்டுமென்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளிநாடுகளில் இருக்கக் கூடிய.....
மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன்:
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, புதிய பள்ளிக் கட்டடங்கள் உருவாக்கித் தர வேண்டுமென்றும், 9 ஏக்கர் நிலம் இருக்கிறது, அதில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்றும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். மாணவர்களின் எண்ணிக்கை கேற்ப வகுப்பறைகள் கட்டுவதற்காக நபார்டு வங்கி நிதியுதவித் திட்டத்தின்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் அந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மைகிரேஷன் சர்ட்டிபிகேட்
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்:
மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, அதேபோல, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நம்முடைய மாணவர்கள் இதுபற்றி மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கே படித்துவிட்டு வெளிநாடுகளுககு மாணவர்கள் படிக்கச் செல்லும் போது ஆபைசயவiடிn ஊநசவகைiஉயவந (மைகிரேஷன் சர்ட்டிபிகேட் )கொடுக்க வேண்டும். கொடுத்தால்தான் வெளி நாடுகளில் சென்று பள்ளிகளில் சேர முடியும். ஆனால், வெளிநாடுகளில் உள்ள கல்வியாண்டின் காலமும், நம் நாட்டில் பின்பற்றப்படும் கல்வியாண்டின் காலமும் வித்தியாசமாக இருப்பதால் இதில் ஞசயஉவiஉயட னுகைகiஉரடவநைள இருக்கிறது. அவற்றைக் களைவதிலும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாடநூலில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு
ஏற்கனவே உங்களிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். தமிழ் மொழிக்காகவும், இந்திய விடுதலைக்காகவும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர் களுடைய வாழ்க்கைப் பாடம் இதற்கு முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நம்முடைய பாடத்திட்டத்தில் இருந்தது. தற்போது இல்லை. அதையும் தற்போதைய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று கோரியிருந்தேன். சேர்ப்பதாக மாண்புமிகு அமைச்சர் சொல்லியிருந்தார்கள். அதைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சுந்தரேசபுரம் பள்ளிக்கூடத் திற்கு புதிய கட்டடம்
எனது தொகுதியில், சுந்தரேசபுரம் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், பள்ளிக் கட்டடம் இடிந்து விழுக்ககூடிய சூழ்நிலையில் இருப்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, அதற்காக சிறப்பு நிதியை ஒதுக்கி விரைவில் பணிகளை தொடங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். அதையும் விரைவாகத் தொடங்க வேண்டுமென்று கேட்டுக், அதற்காக நன்றி சொல்லிக்கொள்கின்றேன்.
சென்னை மதரசே ஆஸம் பள்ளிக்
சென்னையில் மத்தியப் பகுதியில் இருக்கக்கூடிய மதரசே ஆஸம் பள்ளிக் கூடமானது ஆற்காடு நவாப் அவர்களுடைய காலத்தில் வழங்கப்பட்டு, அந்தப் பள்ளிக் கட்டடங்களெல்லாம் தற்போது இடிந்துவிடக்கூடிய நிலையில் பதட்டமான சூழ்நிலை இருந்தது. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடங் களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொன்னார்கள். அதையும் மாண்புமிகு அமைச்சர்கள் அவர்கள் கருணை உள்ளத்தோடு, எத்தனையோ கல்வித் திட்டங்களை அறிவித்து வருகின்ற நீங்கள், இந்த பாரம்பரியமான மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கூடத்தின் கட்டடங்களை உருவாக்குவதற்கும் தயவு கூர்ந்து தாங்கள் கருணைபுரிய வேண்டும் என்று கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இடஒதுக்கீட்டை முறையாக பெற கண்காணிப்பு குழு
அடுத்ததாக, முஸ்லிம் சமுதாயத்தினருக்கென 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு இருக்கின்றது. இது தனி ஒதுக்கீடாக இருப்பதன் காரணமாக, ஏற்கனவே இருந்த எண்ணிக்கையில் இப்போது மிகவும் குறைவாக இருப்பதாக அரசில் இருக்கக்கூடியவர்களே தெரிவிக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தினருடைய இடஒதுக்கீட்டின் பயனை நாங்கள் முழுமையாகப் பெற முடியாமல் இருப்பதன் காரணமாக, நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியது போன்று, தயவுகூர்ந்து முஸ்லிம்களிடையே இடஒதுக்கீட்டை கண்காணிப் பதற்கு ஒரு குழுவை ஏற்படுத்தி, முறையாக அந்த இட ஒதுக்கீட்டின் நன்மை களை நாங்களெல்லாம் அடைவதற் குண்டான ஒரு சூழ்நிலையை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு, சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
|