காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அன்றாட விற்பனை விபரம் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடமிருந்து விபரங்கள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில், பேருந்து நிலைய வளாகத்தின் தென் கிழக்கு பகுதியில், அம்மா உணவகம் அமைத்திட - அப்போதைய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு சண்முகநாதன் தலைமையில், நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் முன்னிலையில் ஜூலை 6, 2014 அன்று அடிக்கல் நட்டப்பட்டு, மே 25, 2015 அன்று - அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் - காணொளி மூலம் துவக்கப்பட்டது.
குறைந்த விலையில் - காலை மற்றும் மதியம் உணவு - இந்த உணவகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உணவகத்தின் அன்றாட விற்பனை விபரம் என்ன?
தகவல் அறியும் உரிமை சட்டம் (RIGHT TO INFORMATION ACT) மூலம் - நடப்பது என்ன? குழுமம் பெற்ற தகவல்கள்:-
ஏப்ரல் 1, 2018 முதல் மே 15, 2018 காலகட்டம் வரையிலான விபரங்களை பார்வையிட்டதில் - தினசரி, சராசரியாக 3000 ரூபாய் வரை விற்பனை நடைபெறுவதாக தெரிகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 7, 2018; 9:00 pm]
[#NEPR/2018070101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|