காயல்பட்டினம் புதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் உடைய தந்தை – தைக்கா தெரு ஊண்டி வீட்டைச் சேர்ந்த கே.ஷாஹுல் ஹமீத், நேற்று (ஜூலை 09 திங்கட்கிழமை) 12.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76. அன்னார்,
மர்ஹூம் பி.எஸ்.ஏ.கபீர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களது மருமகனாரும்,
மர்ஹூம் கே.அஹ்மத் புகாரீ, மர்ஹூம் கே.மஹ்மூத், கே.அபூபக்கர் ஆகியோரது சகோதரரும்,
மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.அப்துல் ஹலீம், மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.புகாரீ, மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.செய்யித் அஹ்மத் ஆகியோரது சகோதரியின் கணவரும்,
புதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.மக்பூல் அஹ்மத், எஸ்.எச்.ஹபீபுர் ரஹ்மான் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் எம்.எச்.ஷாஹுல் ஹமீத் அவர்களது சகலையும்,
மர்ஹூம் எஸ்.ஓ.செய்யித் உமர் அவர்களது மைத்துனரும்,
‘காயல் கனெக்ஷன்’ இணையதள முதன்மைச் செய்தியாளர் ஜெ.ஏ.லரீப் என்பவரது மச்சானும்,
எஸ்.ஓ.ஹபீப், எஸ்.ஓ.ஹாஷிம், பி.ஷேக் அப்துல் காதிர் ஆகியோரது தாய்மாமாவும்,
ஏ.பி.ரிஃபாய், ஏ.பி.காமில், கீழக்கரை எம்.சதக் அப்துல் காதிர் ஆகியோரது சிறிய தந்தையும்,
எஸ்.எச்.முஹம்மத் ஹஸன் என்பவரது பெரிய தந்தையும்,
ஆர்.எம்.முல்தஜிம், எஸ்.ஏ,முஹம்மத் ஷகீல், எஸ்.ஏ.கபீர், எச்.எம்.சயீத் உமர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூலை 10 செவ்வாய்க்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
இப்னு ஆப்தீன்
|