காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உடைய தாய்மாமா – காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த சாளை மஹ்மூத், 12.07.2018. வியாழக்கிழமை 20.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
நெய்னார் தெரு மர்ஹூம் ‘மிட்டாய்க் கடை’ முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மகனும்,
காட்டுத் தைக்கா தெரு மர்ஹூம் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,
கோமான் கீழத் தெரு முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் முஹ்யித்தீன் லெப்பை ஆகியோரின் தந்தையும்,
நோனா மஹ்மூத் நெய்னா என்பவரது மச்சானும்,
மர்ஹூம் இஸ்மாஈல், ‘பம்மு’ செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகளையும்,
சேட் இஸ்மாஈல், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோரின் தாய்மாமாவும்,
ஹனீஃபா, ரியாஸ் ஆகியோரின் மாமாவும்,
கோமான் கீழத் தெரு முஹம்மத் புகாரீ என்பவரது சம்பந்தியும்,
ரிஃபான் புகாரீ என்பவரது தந்தையின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 10.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|