இம்மாதம் 30ஆம் நாளன்று நடைபெற்ற - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், 2018 – 2020 பருவத்திற்கான - அமைப்பின் புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழுவினர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்; காயலர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர் பி.எம்.ஐ. சவூத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 10ம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் 30-06-2018 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஜனாப் எஸ். பாக்கர் சாஹிப், ஜனாப் அரபி ஹாஜா, அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜனாப் கே.எஸ். செய்யது அப்துர்ரஹ்மான் மற்றும் ஜனாப் பி.எஸ்.ஏ. செய்யது அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
கிராஅத் மற்றும் வரவேற்புறை :
ஹாஃபிழ் கே.எம்.ஹெச். அப்துல் வதூத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் (B)பி.எஸ். அஹ்மது சாலிஹ் அனைவரையும் வரவேற்று பேசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் பி.எம்.ஐ. சவூத் பேசினார்.
வரவு – செலவு கணக்கறிக்கை :
அதனைத் தொடர்ந்து நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் ஹாஃபிழ் (B)பி.எஸ். அஹ்மது சாலிஹ் சமர்ப்பிக்க கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
ஆண்டறிக்கை :-
பின்னர் பேரவையின் 10ஆம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள் :-
• தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, பயனாளிகளுக்கு மொத்தம் 1.4 லட்சம் ரூபாய் செலவில் தொழிற்கருவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
• பேரவை, கத்தார் காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா அமைப்புகளுடன் சேர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 4 பெண்கள் தைக்காக்களில் 10 பிப்ரவரி 2018 அன்றும், புற்றுநோய் பரிசோதனை 10ஆவது இலவச முகாமை நமதூர் கே.எம்.டி மருத்துவமனை வளாகத்தில் 11 பிப்ரவரி 2018 அன்றும் நடத்தியது.
• நமதூர் மக்களுக்காக நல்லமுறையில் கல்வி பணியாற்றி வரும் இக்ரா கல்வி சங்கத்திற்கும், மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கும் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு தலா ரூ20,000 வழங்கியது.
• ஷிஃபாவின் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு ரூ1,00,000 உதவித் தொகையையும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் 2017-18 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ50,000 வழங்கியது.
• தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முயற்சியில் நமதூர் இறை இல்லங்களில் பணியாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு சிறப்பு நிதி உதவியளிப்பு ரமழான் மற்றும் துல்ஹஜ் மாதங்களில் நடந்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்தில் நமது பேரவையும் பங்கெடுத்து அதற்காக ரூ1,00,000 (ஹிஜ்ரீ 1438 – ரூ50,000; ஹிஜ்ரீ 1439 – ரூ50,000) நிதி வழங்கியது.
• நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிட கடந்த ஆண்டு துவங்கப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் HK$20,124 தொகை சேகரிக்கப்பட்டு மன்றத்தின் வரவு கணக்கில் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தில் பங்கு பெற்று நன்கொடைகளை வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து, அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் இனைந்து உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
• காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையுடன் இணைந்து, 23.08.2017 அன்று துளிர்பள்ளி கேளரங்கில் “மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?” எனும் தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது.
தலைவர் உரையை தொடர்ந்து, பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் வரவு-செலவு கணக்கறிக்கையை செயற்குழு உறுப்பினர் எல்.ஏ.கே. புஹாரி சமர்ப்பிக்க, அதன் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பேரவை முன்னாள் தலைவர் ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் சமர்ப்பித்தார்.
பின்னர், தையல் தொழில் அமைப்பின் பொறுப்பாளராக நமதூரில் பணியாற்றும் பெண்மணி அவர்கள் அனுப்பியிருந்த ஆடியோ பதிவு ஒன்று ஒலியிடப்பட்டது. தொடர்ந்து, பேரவையின் தொழில் அமைப்பின் நடப்பு செயல்பாடுகள் குறித்தும் அதன் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் உறுப்பினர்கள் கலந்தாலோசனைகளும், கருத்து பறிமாற்றமும் செய்து கொண்டனர்.
புதிய செயற்குழு தேர்வு :
அதனைத் தொடர்ந்து ஜனாப் எஸ். பாக்கர் சாஹிப் அவர்கள் பேரவையின் தேர்வுக் குழுவால் 2018-2020 இரண்டு வருட பருவத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவினை அறிவித்து அறிமுகப்படுத்த, கூட்டத்தினர் தக்பீர் முழக்கத்துடன் அதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழு பின்வருமாறு :-
தலைவர்:
எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில்
துணைத் தலைவர்கள் :
எம்.என். அமீர் சுல்தான்
வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது
செயலாளர்:
பிரபு ஷூஅய்ப்
துணை செயலாளர்:
ஹெச். அப்துல் கஃப்பார்
பொருளாளர்:
எல்.ஏ.கே. புஹாரி
செயற்குழு உறுப்பினர்கள்:
1. எம். ஷேய்க் அப்துல் காதர்
2. ஏ.எஸ்.எல். அப்துல் காதர் நெய்னா
3. ஏ. முஹம்மது அபூபக்கர்
4. எஸ்.ஹெச். ஹபீப் ரஹ்மான்
5. பி.எம்.ஐ. சவூத்
6. ஹாஃபிழ் எம்.எம். சுல்தான்
7. டி.ஏ.எம். (Z)சமீர்
8. எஃப். அஹ்மது முஹிய்யதீன்
9. எஸ். முஹம்மது அர்ஷத்
பதவி வழி உறுப்பினர்:
ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி
தேர்வுக்குழு உறுப்பினர்கள் :
ஜனாப் ஏ.எஸ்.ஜமால் முஹம்மது
ஜனாப் எஸ். பாக்கர் சாஹிப்
ஜனாப் எம். எஸ். முஹம்மது சலாஹுதீன்
புதிய தலைவரின் ஏற்புறை :
புதிய தலைவர் எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் ஏற்புரையாற்றினார். அவரது தலைமையிலான புதியக்குழு நமதூரிலுள்ள நலிவுற்றவர்களுக்கு நற்பணிகளையாற்றிட பாடுபடும் என்றும், ஹாங்காங், சீனாவிலுள்ள அனைவரும் பேரவையில் சேர்ந்து பேரவையின் பணிகளுக்கு உதவியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
மற்ற நிகழ்வுகள் :
பேரவையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு மன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட புனித மக்காஹ் நகரில் வசிக்கும் ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஒய்.எம். முஹம்மது ஸாலிஹ் வாழ்த்துரை வழங்கினார்.
அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஸ். ஷேய்க் தாவூத் நன்றி கூறினார். நிறைவாக ஜனாப் கே.எஸ். செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான காயல் கஞ்சி, கட்லட் மற்றும் சமோசா வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|