காயல்பட்டினம் சித்தன் தெருவில் அடங்கியிருக்கும் மஹான் ஸெய்யித் அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் 136ஆவது ஆண்டு கந்தூரி விழா இம்மாதம் 10, 11. 12 (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய 3 நாட்களில் நடைபெற்றது.
அந்நாட்களில் அதிகாலை கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இஷா தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை உள்ளடக்கி சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
முதல் நாளன்று – காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உரையாற்றினார். இரண்டாம் நாளன்று மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ உரையாற்றினார்.
நிறைவு நாளான நேற்று (ஜூலை 12) அதிகாலையில் மாலையில் மஹான் அவர்களின் புகழ்பாடும் மர்திய்யா ஓதப்பட்டது. மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ சொற்பொழிவாற்றினார். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
அனைத்து நாட்களிலும் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
SM சவுண்ட்ஸ் மவ்லானா மூலமாக
ஜெஸீமுத்தீன்
|