காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ‘எழுத்து மேடை’ பகுதி ஆசிரியர்களுள் ஒருவரும் – ‘விடியல் வெள்ளி’ மாத இதழின் ஆசிரியருமான எம்.எஸ்.அப்துல் ஹமீத் உடைய தந்தை – காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த எஸ்.எச்.முஹம்மத் ஸாஹிப் தம்பி, நேற்று (14.07.2018. சனிக்கிழமை) 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் ம.வு.ஷாஹுல் ஹமீத் அவர்களது மகனும்,
எம்.எஸ்.அப்துல் ஹமீத், எம்.எஸ்.புகாரீ சுலைமான் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 11.00 மணிக்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|