காயல்பட்டினம் கடற்கரை அருகே – ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதை, சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்துள்ளார். விரிவான விபரம்:-
ஹாங்காங் & காயல்பட்டினத்தில் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் வி யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக, காயல்பட்டினம் கடற்கரைக்கருகே – முன்னாள் காயல்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சித் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் வி.எம்.எஸ். லெப்பை அவர்களது நினைவாக, “வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டு மைதானம்” அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா, கடந்த 16.06.2018. சனிக்கிழமையன்று நடைபெற்றது. காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சிக்கு வி.எம்.எஸ்.அமீன் தலைமையேற்க, வாவு ஆப்தீன், எம்.ஐ.பஷீர், வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
வாவு அம்ர் அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஜெ.ஏ.லரீஃப் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சம்பத் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, எஸ்.இப்னு ஸஊத், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி தலைவர் வழக்குரைஞர் அஹ்மத், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.எல்.ஷேக்னா லெப்பை, என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிறைவுரையாற்றினார்.
அடுத்து நடத்தப்படவிருந்த - வி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் (வி யுனைட்டெட் கே.பீ.எல்.) கால்பந்து சுற்றுப் போட்டியை முன்னிட்டு, அதில் பங்கேற்கும் அணிகளுக்கு இதன்போது சீருடைகள் வழங்கப்பட்டன.
இவ்விழா மேடையில் வீற்றிருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், இம்மைதானம் அமைய தொடர்ந்து உழைத்தவர்கள் இவ்விழாவின்போது சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டனர். நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
|