திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து, காயல்பட்டினத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளார் என 2011-2012 முதலான ஆண்டுகளின் விபரங்களை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அவரின் தொகுதி மேம்பாட்டுக்காக, மாநில அரசு - ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது.
அந்த நிதி மூலம் (MEMBER OF LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCY DEVELOPMENT SCHEME; MLACDS), அவரின் தொகுதியில் உள்ள எந்த பகுதிக்கும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள - சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்யலாம்.
ஆண்டொன்றுக்கு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் தொகை - 2011 - 2012 நிதியாண்டு முதல், 2 கோடி ரூபாயாகும்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 15 சதவீத வாக்காளர்களை கொண்ட காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு, சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - 2011 - 2012 முதல், எவ்வளவு நிதி ஒதுக்கினார்?
இது குறித்த விபரங்களை (2017 - 2018 வரை), நடப்பது என்ன? குழுமம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RIGHT TO INFORMATION ACT; RTI) கீழ் பெற்றுள்ளது.
அதன் விபரங்கள் இதோ:
2011-2012 முதல் 2017-2018 வரை, காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய மொத்த தொகை:
ரூபாய் 64,40,750
ஆண்டு வாரியாக சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய தொகை
2011-2012: ரூபாய் 0
2012-2013: ரூபாய் 21,00,000
2013-2014: ரூபாய் 0
2014-2015: ரூபாய் 14,90,750
2015-2016: ரூபாய் 10,00,000
2016-2017: ரூபாய் 1,00,000
2017-2018: ரூபாய் 17,50,000
இந்த நிதி மூலம் - காயல்பட்டினம் பகுதியில் எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன; காயல்பட்டினம் மக்கள் தொகையில் எவ்வளவு விகிதாசாரத்தில் - சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கினார் போன்ற விபரங்கள் அடுத்த பாகத்தில் வழங்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 12, 2018; 6:00 pm]
[#NEPR/2018071203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|