காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை - விதிமுறைகளின்படி தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தற்போது மூன்று இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், அந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளததை அறியாத வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
இது சம்பந்தமாக இன்று நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், திருச்செந்தூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் உட்கோட்டபொறியாளர் அலுவலகத்திற்கு சென்று - அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் (INDIAN ROAD CONGRESS; IRC) முடித்திட கோரினர்.
மேலும் - முழுமையாக முடிக்கப்படும் வரை, அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்திடவும் கோரினர்.
நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்படும் இந்த வேகத்தடைகளுக்கு -
===== முறையான சாய்வு (SLOPE) கொண்டு அமைத்திடவும்
===== இரவிலும் கண்ணுக்கு தெரியும் வகையில் வர்ணம் பூசிடவும்
===== வேகத்தடைக்கு முன்னரே - இது குறித்த அறிவிப்பு பலகை நிறுவிடவும்
கோரிக்கை வைக்கப்பட்டது.
IRC விதிமுறைகள் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 11, 2018; 12:15 pm]
[#NEPR/2018071103]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|