காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை ஆய்வு செய்து, விதிமுறைகள் படி மாற்றியமைத்திடுமாறு - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி சாலைகளை பயன்படுத்தும் பொது மக்களின் நலன் கருதி - நகரின் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நகராட்சி மூலமும், சில தனியார் மூலமும் அமைக்கப்பட்டவை ஆகும்.
இந்த வேகத்தடைகள் பல - இதுகுறித்த விதிமுறைகள்படி அமைக்கப்படவில்லை. சில இடங்களில் மிக உயரமாக இந்த வேகத்தடைகள் உள்ளதால், அவைகளே விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
நகராட்சி சாலைகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அனைத்து வேகத்தடைகளையும், பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேவையில்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அப்புறப்படுத்தி, மீதி வேகத்தடைகளை - விதிமுறைகள் தெரிவிக்கும் அம்சங்கள்படி மாற்றி (சாய்வு, வர்ணம், அறிவிப்பு பலகை) அமைத்திட கோரி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்திடம் இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 12, 2018; 11:30 am]
[#NEPR/2018071201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|