திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுமார் 5 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அடிப்படையாக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் - 2,27,007 (2016 தேர்தலின் போது) ஆகும். இதில் காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் 33,652 (2016 தேர்தலின் போது).
அதாவது தொகுதியின் மொத்த வாக்காளர்களில் சுமார் 14 சதவீதம் - காயல்பட்டினம் சார்ந்தவர்கள்.
கடந்த காலங்களில், பதிவான வாக்குகளில் சுமார் 13 சதவீதம் - காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்குகள் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் திரு அனிதா ராதாகிருஷ்ணன் உடைய மொத்த வாக்குகளில் - குறைந்தது 17 சதவீதம் வாக்குகள், காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்குகளாக இருந்துள்ளது.
புள்ளிவிபரங்கள் இவ்வாறு இருக்க, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் - காயல்பட்டினம் நகராட்சி பகுதி வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி - தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (MEMBER OF LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCY DEVELOPMENT SCHEME; MLACDS) - செலவிட்டுள்ளார்?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் - நடப்பது என்ன? குழுமம், 2011 - 2012 நிதியாண்டு முதலான தகவல்கள் பெற்றது. 2017 - 2018 வரையிலான காலகட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் - காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு ஒதுக்கிய தொகை - ரூபாய் 64,40,750 ஆகும். இந்த காலகட்டத்தில் (7 ஆண்டுகள்) - இவருக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசு ஒதுக்கிய தொகை - 14 கோடி ரூபாய் ஆகும். (ஆண்டொன்றுக்கு 2 கோடி ரூபாய்).
அதாவது - கடந்த 7 ஆண்டுகளில், காயல்பட்டினம் பகுதிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் - தனக்கான மொத்த ஒதுக்கீட்டில் இருந்து, 4.5 சதவீதம் அளவிற்கு, காயல்பட்டினம் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆண்டு வாரியாக, எந்தெந்த பணிகள் - சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, காயல்பட்டினம் பகுதியில் நிறைவேற்றப்பட்டது என்ற விபரம் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 12, 2018; 9:30 pm]
[#NEPR/2018071204]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|