காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, நகரின் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதோடு, சாலைப் பழுதுகளில் சிலவும் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் முறையான எச்சரிக்கை அறிவிப்புகள் விரைவில் நிறுவப்படவுள்ளது. பொதுமக்கள் இவ்வேகத்தடைப் பகுதிகளில் கடந்து செல்கையில் கவனமாகச் செயல்படுமாறு குழுமத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
=== சேக் ஹுசைன் பள்ளி வாயிலில்,
=== பேருந்து நிலையத்தில் இருந்து திரும்பிய உடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு முன்னர்,
=== தாயிம்பள்ளி வாயிலில்
என மூன்று இடங்களில் - நெடுஞ்சாலைத்துறை மூலம், வேகத்தடைகள் அமைக்கும்பணி நடைபெறுகிறது.
இரு தினங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இப்பணிகள் நிறைவில் -
=== அந்த வேகத்தடைகளுக்கு சாய்வு (SLOPE) கொடுக்கப்படும்
=== வர்ணம் பூசப்படும்
வேகத்தடைகளுக்கு முன்னரே அறிவிப்பு பலகை வைக்கவும் கோரப்பட்டுள்ளது
எனவே - இந்த சாலைப்பகுதியை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்கள், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பாக வாகனங்களை ஒட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 11, 2018; 5:30 am]
[#NEPR/2018071101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|