காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்க “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, 80 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் அதைப் புனரமைத்திட தற்போது அரசு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும (தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி) மாநில நெடுஞ்சாலை (# 176), பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது.
மேலும் - வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளை தடுக்க, தாயிம்பள்ளி வாயில் அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் - வேகத்தடைகள் அமைக்கவேண்டிய அவசியமும் உள்ளது.
இவ்விரு கோரிக்கைகளையும் - கடந்த சில மாதங்களாக, நடப்பது என்ன? குழுமம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. விரைவில் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உத்தரவாதங்கள் தரப்பட்டாலும், அப்பணிகளை துவங்க காலதாமதம் ஆகிவந்தது.
இந்நிலையில் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், கடந்த மே மாதம், சென்னை தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலர் மற்றும் கூடுதல் தலைமை செயலருமான திரு ராஜீவ் ரஞ்சன் IAS அவர்களை சந்தித்து, இக்கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து, அத்துறையின் கூடுதல் செயலர் திரு ஜீவானந்தம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்னர் - நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் திருமதி சாந்தி அவர்களையும், நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதன் பயனாக, நடப்பது என்ன? குழுமத்தின் கோரிக்கைகளை ஏற்று, நெடுஞ்சாலைத்துறை - கடிதம் அனுப்பியுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அதில் -
பேருந்து நிலையம் அருகிலும், பள்ளிவாசல் முன்பாகவும் வேகத்தடை அமைக்கப்படும்
அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி / தபால் நிலையம் அருகில் சாலைகள் சீரமைக்கப்படும்
பேருந்து நிலையம் அருகில், குடிநீர் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட இடத்தில் தார்நொடிகள் போடப்படும்
காயல்பட்டினம் ஊருக்குள் கிலோமீட்டர் 31/10 - 32/8 வரை சாலையை சீரமைக்க CRIDP திட்டத்தில் ரூபாய் 80 லட்சத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 7, 2018; 9:15 pm]
[#NEPR/2018070703]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|