காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மாத ஊதியம் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடமிருந்து விபரங்கள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில், பேருந்து நிலைய வளாகத்தின் தென் கிழக்கு பகுதியில் மே 26, 2015 முதல் இயங்கிவருகிறது அம்மா உணவகம்.
குறைந்த விலையில் - காலை மற்றும் மதியம் உணவு - இந்த உணவகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த உணவகத்திற்கான செலவு, நகராட்சியின் பொது நிதியில் (GENERAL FUND) இருந்து வழங்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்பெறும் இந்த உணவகம் குறித்த பல்வேறு தகவல்களை நடப்பது என்ன? குழுமம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RIGHT TO INFORMATION ACT) மூலம் பெற்றுள்ளது.
அன்னம் மகளிர் சுய உதவிக்குழு என்ற அமைப்பு மூலம், இந்த உணவகத்தில் 12 நபர்கள் பணியாற்றுகிறார்கள்.
இவர்களுக்கான - ஒரு நாள், நபர் ஒன்றுக்கான ஊதியம் ரூபாய் 250.
பணியாளர்கள் விபரம் (முகவரி மறைக்கப்பட்டு) இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 7, 2018; 8:30 am]
[#NEPR/2018070701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|