“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
நமது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அவர்களது மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...) அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – மதியம் 01.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த பெருந்தகை அவர்களது பாவப் பிழைகளை – கருணையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில் நல்லோர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 14, 2018; 9:30 am]
[#NEPR/2018071401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|