திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெருமுறை பரப்புரைக் கூட்டம், 14.07.2018. சனிக்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
கட்சியின் நகர பொறுப்பாளர் எம்.ஏ.கே.முத்து முகம்மது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினம் நகருக்கு இதுவரை செய்யப்பட்டுள்ள நலத்திட்டப் பணிகள் குறித்து, அண்மையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலறிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் – குழுமத்தை விமர்சித்துப் பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குத் தான் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தடையாக இருந்ததாக அவர் தனதுரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், நகர திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர். |