காயல்பட்டினத்தில் செய்யப்பட வேண்டிய மருத்துவ உதவி வசதிகள் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு நிகழ்நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் நகரில் அவசர மருத்துவ உதவி கிடைப்பதில் நிலவும் சில ஐயப்பாடுகள், அதற்கான தீர்வுகள் குறித்து - நடப்பது என்ன? குழுமம், ஏற்பாட்டில் - கடந்த பிப்ரவரி மாதம், காயல்பட்டினம் பூர்வீக மருத்துவர்கள் கொண்டு, ஒரு கலந்தாலோசனை கூட்டம் (EMERGENCY MEDICAL CARE IN KAYALPATTINAM; SOLUTION - BASED INTERACTION WITH DOCTORS) நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடந்த கலந்துரையாடல் மற்றும் பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் - இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் - பல்வேறு முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் செய்து வருகிறது. அவை - இறைவன் நாடினால் - அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படும்.
குறிப்பாக - இவ்விஷயத்தை, நடப்பது என்ன? குழுமம் - இரு கோணத்தில், அணுகி வருகிறது.
(1) வீடுகளுக்கு சென்று வழங்கவேண்டிய மருத்துவ உதவி
(2) மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு வழங்கவேண்டிய மருத்துவ உதவி
இது சம்பந்தமாக - பல்வேறு மருத்துவர்களை அணுகி, ஆலோசனைகளை பெற்று, முழுமையான செயல் திட்டம் ஒன்றினை நடப்பது என்ன? குழுமம் வடிவமைத்து வருகிறது. இது குறித்த முழு விபரம் - இறைவன் நாடினால் - அடுத்த மாதம், நடத்தப்படவுள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் அறிவிக்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 18, 2018; 5:30 pm]
[#NEPR/2018071801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|